என் மலர்
இந்தியா

விமானத்தில் அமெரிக்க பெண்ணின் உயிரை காப்பாற்றிய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ - சித்தராமையா பாராட்டு
- டெல்லியில் பாஜகவின் வாக்கு திருட்டுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றுகொண்டிருந்தார்.
- இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மருத்துவருமான அஞ்சலி நிம்பல்கர் விமானப் பயணத்தின் போது சக பயணியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டை குவித்து வருகிறது.
கோவாவின் பொறுப்பான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருக்கும் நிம்பல்கர்,
டெல்லியில் பாஜகவின் வாக்கு மோசடியை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அவர் கோவாவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில், அதே விமானத்தில் பயணித்த அமெரிக்க பெண் உடல்நிலை சரியில்லாமல் போனார்.
சோர்வு மற்றும் நடுக்கம் எடுத்து அவரின் பல்ஸ் இறங்கியது. உடனே அவருக்கு அஞ்சலி CPR சிகிச்சை கொடுத்தார். பின்னர், சற்று சுயநினைவு அடைந்த அவரை பயணம் முழுவதும் கவனித்துக்கொண்டார்.
டெல்லியில் தரையிறங்கிய உடனேயே அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அஞ்சலி அளித்த சிபிஆர் சிகிச்சையால் அப்பெண்ணின் உயிர் காட்டப்பற்றது.

இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.






