என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்குத் திருட்டிற்காக மோடியும், அமித் ஷாவும் பிடிபடுவார்கள் - ராகுல் காந்தி
    X

    வாக்குத் திருட்டிற்காக மோடியும், அமித் ஷாவும் பிடிபடுவார்கள் - ராகுல் காந்தி

    • பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்
    • பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து வாக்குத் திருட்டை நிறுத்த வேண்டும்.

    பீகாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நிலையில் கிஷன்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

    அவர் கூறியதாவது, "எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.

    பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.

    பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.

    பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் வரும் 11 ஆம் தேதி 112 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. . 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    Next Story
    ×