என் மலர்

  நீங்கள் தேடியது "Sikhs"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் சீக்கியர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வாகா எல்லை வழியாக சென்று பாகிஸ்தான் செல்வார்கள்.

  புதுடெல்லி:

  சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது.

  அங்கு புகழ் பெற்ற குருத்துவாரா அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. குருநானக்கின் பிறந்த நாளையொட்டி சீக்கியர்கள் இந்த கோவிலுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம்.

  இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் அங்கு செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு விசா வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  ஏற்கனவே சில நேரங்களில் இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அனுமதி தர மறுத்து இருக்கிறது.

  இந்த நிலையில் குருநானக்கின் 552-வது ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புனித யாத்திரை செல்ல ஏராளமான சீக்கியர்கள் விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

  குருநானக் பிறந்த ஊருக்கு செல்ல 8 ஆயிரம் சீக்கியர்களுக்கு அனுமதி

  உலகம் முழுவதும் இருந்து 8 ஆயிரம் சீக்கியர்கள் இதில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.

  ஆனால் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. மற்ற சீக்கியர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் ஆவர்.

  இந்தியாவில் இருந்து செல்லும் சீக்கியர்கள் வாகா எல்லை வழியாக சென்று பாகிஸ்தான் செல்வார்கள். பின்னர் அங்குள்ள வாகனங்கள் மூலம் அவர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

  இதையும் படியுங்கள்...18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீக்கியர்களுக்கு எதிராக 1984-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறை தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு கண்டிக்கும் வகையில் ராகுல் காந்தி வீட்டின் அருகே டெல்லி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #BJPprotests #RahulGandhi #SamPitroda #antiSikhriots
  புதுடெல்லி:

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

  அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

  தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்த பிரச்சனையை மையப்படுத்தி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ’அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்துப்போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

  ‘ஆனது ஆகிப்போனது, முடிந்துப்போன கதை’ என சீக்கிய மக்களின் உயிரிழப்பை துச்சப்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், இந்த விவகாரத்தை மையப்படுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி வீட்டின் அருகே பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  #BJPprotests #RahulGandhi #SamPitroda #antiSikhriots
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் சீக்கியர், இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. #Afghanistan #SikhsHindus
  காபூல்:

  முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் சீக்கியர் மற்றும் இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினமும் இவர்கள் மிகப்பெரும் தாக்குதலுக்கு இலக்காகினர்.

  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை சந்திப்பதற்காக ஜலாலாபாத்தில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.  இதில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர் மற்றும் இந்துக்கள் ஆவர். அங்கு சீக்கிய குழுக்களின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வந்த அவதார் சிங் கல்சாவும் இதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

  இந்த சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இது தொடர்பாக அந்த இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது.  #Afghanistan #SikhsHindus #Tamilnews 
  ×