என் மலர்
உலகம்

வடக்கு கலிபோர்னியாவில் கைதான 2 சீக்கியர்கள் இந்தியாவில் பல கொலைகளில் தொடர்புடையவர்கள்
- நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர்.
- கும்பலிடம் இருந்து பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில், வார இறுதி நாளில் 2 சீக்கிய குழுவினர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வடக்கு கலிபோர்னியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் இந்தியாவில் நடந்த கொலை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்த கும்பலிடம் இருந்து போலீசார் ஏ.ஆர். 15 மற்றும் ஏ.கே.47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மிஷின் துப்பாக்கிகள் உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலைகளில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.






