search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake video"

    • ‘டீப்பேக்’ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • ‘டீப்பேக்’ படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும்.

    புதுடெல்லி:

    புகைப்படம், வீடியோ, ஆடியோவை அச்சு அசலாக போலியாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 'டீப்பேக்'. இதன் மூலம் ஒருவரின் புகைப்படம், வீடியோவில் மற்றொருவரின் உருவத்தை ஏற்றி, நிஜம் போல உருவாக்க முடியும். ஆடியோவையும் மாற்ற முடியும்.

    இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் போன்ற பிரபல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் உருவாக்கப்பட்டது, மிகுந்த சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

    இந்த தொழில்நுட்பமானது சமூகத்தில் பெரும் நெருக்கடியையும், அதிருப்தியையும் உருவாக்கலாம். இது தவறாக பயன்படுத்தக்கூடிய அபாயம் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் வலியுறுத்தியிருந்தார்.

    இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போலியாக வீடியோ, ஆடியோவை உருவாக்கும் 'டீப்பேக்' விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி அந்த நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் 'டீப்பேக்' விஷயத்தில் இன்னும் தீவிரமான நடவடிக்கையை சமூக ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    எனவே அடுத்த 3, 4 நாட்களில், சமூக ஊடக நிர்வாகிகளுடன் நாங்கள் கூட்டம் நடத்தவிருக்கிறோம். அதில் 'டீப்பேக்' தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டு, அதை தடுப்பதற்கும், 'டீப்பேக்' படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும். மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களும் அதில் அடங்கும்.

    'டீப்பேக்' படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை அகற்றாத சமூக ஊடகங்கள், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் பாதுகாப்பு பெற முடியாது.'

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் இன்று பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், 'தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடருவோம் 'என எச்சரிக்கை விடுத்துள்ளார். #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி  கடந்த 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புதிய நோட்டுகளை மாற்ற 40 சதவீதம் கமிஷனாக கேட்டது பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த வீடியோ போலியானது என பா.ஜ.க. மறுத்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. மீது அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளோம். போலி வீடியோக்களை வெளியிட்டு பா.ஜ.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு பாஜக மீது அவதூறு பரப்புவது காங்கிரஸ் கட்சிக்கு இது முதல் முறையல்ல. அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என பா.ஜ.க. தலைவர் பூபேந்திர் யாதவ் குறிப்பிட்டுள்ளார். #NirmalaSitharaman #Congress
    ×