என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களுக்கு மருத்துவமனை கேட்டதற்கு பலனாக சிறைவாசம்..  ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது பற்றி கெஜ்ரிவால்
    X

    மக்களுக்கு மருத்துவமனை கேட்டதற்கு பலனாக சிறைவாசம்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது பற்றி கெஜ்ரிவால்

    • இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
    • சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி.

    ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

    சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தனது தொகுதி மக்களுக்கு மருத்துவமனை கேட்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏவை சிறையில் அடைக்க வேண்டிய அளவுக்கு பெரிய குற்றமா? மெஹ்ராஜ் மாலிக் ஆம் ஆத்மி கட்சியின் சிங்கம்.

    மக்களின் குரலாக மாறி அவர்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதும் போராடுவார். சிறை, அச்சுறுத்தல்கள் மற்றும் சதித்திட்டங்கள், இவை அனைத்தும் ஆம் ஆத்மியின் எந்த சிப்பாயையும் ஒருபோதும் பயமுறுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், " இது அரசாங்கத்தின் வெளிப்படையான சர்வாதிகாரம், மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்கள்.

    ஆனால் சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×