search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Bhagwant Mann"

  • பகவத் மான்-க்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை.
  • அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது நாங்கள் கவலையாக உணர்கிறோம்.

  சிரோமணி அகாலி தளம் தலைவர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். பகவத் மான் குறித்து சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:-

  பகவத் மான்-ஐ நான் சீக்கியராக கருதவில்லை. அவர் அணிந்துள்ள தலைப்பாகை அவரை சீக்கியராக காட்டுகிறது. அவருக்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை. அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது எங்கங்கு கவலையாக உள்ளது.

  இந்தியாவில் 18 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களுக்கு என தலைவர் இல்லை. நாம் இரண்டு சதவீதம்தான் உள்ளோம். என்றபோதிலும் நாம் ஸ்ரீ அகால் தக்த் சாகிப் கீழ் ஒன்றிணைந்துள்ளோம்.

  அவர்கள் (ஆம் ஆத்மி) பஞ்சாபை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் கிடையாது.

   சீக்கியர்களை கொண்ட அனைத்து மாநிலங்களிலும் சிரோமணி அகாலி தளம் அமைப்புகளை தொடங்கும்.

  இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

  கடந்த ஆணடு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகள் படுதோல்வியடைந்தன. 117 இடங்களை கொண்டு பஞ்சாபில் 92 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

  • நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
  • இருவரையும் சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

  டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

  இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.

  அந்த வகையில், இன்று தமிழகம் வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

  அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான சிங்கும் உள்ளார்.

  இருவரையும் சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

  • அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  • நாங்கள் எந்த அப்பாவி மனிதரையும் தொல்லைப்படுத்த மாட்டோம்.

  சண்டிகார் :

  பிந்தரன்வாலேவுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை முன்னெடுத்தவர் அம்ரித்பால் சிங். நேற்று அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

  இதன் மூலம் கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக நடந்து வந்த போலீசாரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

  இவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

  35 நாட்களுக்கு பிறகு அம்ரித்பால் சிங் இன்று (நேற்று) கைது செய்யப்பட்டு விட்டார்.

  அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயற்சித்து, நாட்டின் சட்டத்தை மீறியவர், சட்டப்படியான நடவடிக்கையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

  நாங்கள் எந்த அப்பாவி மனிதரையும் தொல்லைப்படுத்த மாட்டோம். நாங்கள் பழிவாங்கும் அரசியல் செய்யவும் இல்லை.

  கடந்த 35 நாட்களாக மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடித்து வந்ததற்காக பஞ்சாபின் 3½ கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அம்ரித்பால் சிங்கின் கடந்த காலம் பற்றிய முக்கிய தகவல்கள்:-

  அம்ரித்பால் சிங்கின் முழுப்பெயர் அம்ரித்பால் சிங் சந்து ஆகும். இவர் 1993-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி பிறந்தவர்.

  அமிர்தசரஸ் மாவட்டத்தில் வளர்ந்தவர். இவர், தனது பெற்றோருக்கு 3-வது மகன் ஆவார். அவரது குடும்பம், சீக்கிய மதத்தில் தீவிரமான பற்று கொண்டதாகும்.

  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து, படிப்பை பாதியில் நிறுத்தியவர். 2012-ல் துபாய்க்கு சென்று தனது குடும்பத்தாரின் போக்குவரத்து தொழிலில் இணைந்தார்.

  10 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு திரும்பியவர் தன்னை மத பிரசாரகராக அறிவித்துக்கொண்டு, பிரசாரம் செய்தார்.

  பிந்தரன்வாலேயின் ஆதரவாளராக தன்னை பிரகடனம் செய்ததோடு மட்டுமின்றி, இரண்டாம் பிந்தரன்வாலே என்று சொல்லக்கூடிய வகையில் விசுவரூபம் எடுத்து காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை கையில் எடுத்தார்.

  அதன் விளைவுதான் இப்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிற அளவுக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

  • ஆம் ஆத்மி கட்சி 104 இடங்களை வென்றதுடன் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
  • பாஜக 83 வார்டுகளில் வெற்றி பெற்றதுடன், 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

  டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி அந்த கட்சி 104 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 31 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது, இதன் மூலம் மொத்தம் 135 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெறும் என தெரிகிறது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற்றால் போதும்.

  இதனையடுத்து 15 ஆண்டு காலமாக பாஜகவின் வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மதியம் 12.30 மணி நிலவரப்படி பாஜக 83 வார்டுகளை வென்று 19 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

  இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளதாவது:  டெல்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் அகற்றினார். தற்போது மாநகராட்சியில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சியையும் அவர் அகற்றி உள்ளார். டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை, பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், தூய்மை மற்றும் உள்கட்டமைப்புக்காக வாக்களிக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • பகவந்த் மானின் இந்த நடத்தை பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்
  • அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி விளக்கம்

  சண்டிகர்:

  பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிகமாக மது குடித்ததால் சமீபத்தில் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமானத்தில் பகவந்த் மான் பயணிக்க இருந்ததால், அவருக்காக விமானம் 4 மணி நேரம் காத்திருந்ததாகவும், பின்னர் தள்ளாடியபடி அவர் விமானத்தில் ஏறியதாகவும், இது விமானத்தின் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்பதால், அவர் இறக்கவிடப்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகி உள்ளன.

  இந்த தகவல் குறித்து ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் டுவிட்டரில் பதிவிட்டு, பஞ்சாப் மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது என குறிப்பிட்டுள்ள சுக்பிர் சிங் பாதல், பகவந்த் மானின் இந்த நடத்தை, உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

  "முதல்வர் பகவந்த் மான் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை என்றும், அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் பயணி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

  ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த தகவல் வதந்தி என்றும், பிராங்பர்ட் விமான நிலையத்தில் பகவந்த் மான் இறக்கிவிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது. அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வரால் விமானத்தில் ஏற முடியவில்லை என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறினர்.

  • பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு தற்போது 48 வயதாகிறது.
  • குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை பகவந்த் மான் மணக்கிறார்.

  சண்டிகார் :

  நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, இப்போது பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக உயர்ந்துள்ளவர் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி, சீரத், தில்ஷன் என 2 குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர்.

  தற்போது இந்தர்பிரீத் கவுர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். இந்த நிலையில் பகவந்த் மானுக்கு 2-வது திருமணத்துக்கு அவரது தாயார் ஹர்பால் கவுரும், சகோதரி மான்பிரீத் கவுரும் ஏற்பாடு செய்துள்ளனர். குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை சண்டிகாரில் இன்று பகவந்த் மான் மணக்கிறார்.

  மணவிழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியோ ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளதாக சண்டிகாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • முந்தைய ஆட்சிகளின் கீழ் பல்வேறு வகையான மாஃபியாக்கள், போக்குவரத்து மாஃபியாக்கள் வளர்ந்தது.
  • மூன்று மாதங்களில் மட்டும் 130 குண்டர்கள் மாநிலத்தில் பிடிபட்டுள்ளனர்.

  பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடுமையானது மற்றும் நேர்மையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், முந்தைய ஆட்சிகளின் கீழ் பல்வேறு வகையான மாஃபியாக்கள், போக்குவரத்து மாஃபியாக்கள் வளர்ந்ததாகக் கூறினார்.

  ஜலந்தரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சொகுசு பேருந்து சேவையைத் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

  பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு. கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை.

  ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனைத் தொடங்குவது உட்பட, ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் பஞ்சாபை துடிப்பானதாக்குவோம். முந்தையை அரசு பஞ்சாப் அரசை சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முந்தைய ஆட்சிகள் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது குண்டர்கள் அரசியல் ஆதரவைப் பெற்றனர். மூன்று மாதங்களில் மட்டும் 130 குண்டர்கள் மாநிலத்தில் பிடிபட்டுள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×