என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு அழைப்பு
    X

    காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு அழைப்பு

    • காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.
    • விழா அழைப்பிதழை திமுக எம்.பி. வில்சன் அவர்கள் பஞ்சாப் முதலமைச்சரிடம் வழங்கினார்.

    சென்னையில் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத் தொடக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தருமாறு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு திமுக எம்.பி. வில்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் மாண்புமிகு பகவந்த் மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.

    இன்று காலை விழா அழைப்பிதழை திமுக எம்.பி. வில்சன் அவர்கள் பஞ்சாப் முதலமைச்சர் அவர்களிடம் நேரில் வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் வரவேற்றார்.

    மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புமிகு திட்டமான காலை உணவு திட்டம் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது திராவிட மாடல் அரசு !

    இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×