என் மலர்
நீங்கள் தேடியது "Governor"
- தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.
- தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மறைக்கப்பட்டன.
கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் மீது வரதட்சணை கொடுமை புகார் சுமத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் தேவேந்திர கெலாட் கடந்த 2018 இல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார்.
திவ்யா அளித்த புகாரில், தனது மாமனார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கோரியதாகவும், தன்னை மீண்டும் மீண்டும் உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். பணம் கொண்டுவரவில்லை என்றால் உணவு கிடையாது என கூறி சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார்.
கடந்த 2025, ஜனவரி 26 அன்று மதுபோதையில் இருந்த தனது கணவர் தன்னைத் தாக்கி, வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே, தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்கள் தன்னிடம் மறைக்கப்பட்டதாக திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகளை பார்க்க விடாமல் தன்னை தடுப்பதாகவும் திவ்யா குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் மத்திய பிரதேச போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதேந்திரா கெலாட், "யாராலும் எவர் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்க முடியும்" என்று கூறி, விரைவில் உண்மைகளை தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார்.
- புதுச்சேரி, போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என கண்டன ஆர்ப்பாட்டம்.
- விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது.
அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது.
அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.
- அடுத்த கூட்டத்தொடரில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது.
பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சண்டிகருக்கு தனியாக துணைநிலை ஆளுநரை நியமிக்கும் வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அரியானாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே ஆளுநர்கள் உள்ளனர். தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசம் பஞ்சாப் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாப் ஆளுநாரால் நிர்வகிக்கப்பட்டுவரும் சண்டிகருக்கு, துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டால், தலைநகர் மீதான உரிமைகள் நீர்த்துப்போகச் செய்யும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சண்டிகருக்கு தனியே துணை நிலை ஆளுநரை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு கடுமையான அநீதி என்றும், பஞ்சாபின் தலைநகரைப் அபகரிக்க பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.
- கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
- குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத் ஆளுநராக உள்ளார்.
- சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, மராட்டிய மாநிலத்துக்கு பொறுப்பு ஆளுநராக குஜராத் மாநில ஆளுநரை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத், கவர்னராக இருக்கிறார். இவர் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி.
- மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சில மசோதாக்கள் நிறுத்தப்பட்டுதான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மசோதாக்கள் மீது ஆளுநர்கள், ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மெல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.
நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மசோதாக்கள் காலவரையின்றி தாமதமாக வருவதை மத்திய அரசு நியாயப்படுத்தவில்லை.
கடந்த 55 ஆண்டுகளில் 17,000 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 20 மசோதாக்களை மட்டும் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மாநிலங்கள் தவறான புகார்களை எழுப்புகின்றன என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சூர்யகாந்த், "எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, "மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக ஆளுநர்களால் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.
இதன்பின் பேசிய துஷார் மேத்தா, " ஆளுநரின் பங்கு அரசியலமைப்பின் பாதுகாவலர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதுதான். காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் ஒரு வரையறையை உருவாக்க முடியாது.
மசோதாக்கள் அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலைகளில் இருக்கும்போது ஒப்புதலை நிறுத்தி வைக்க வேண்டும்அவசியம் உள்ளது" என்று வாதிட்டார்.
- குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார்.
- இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு இழுத்தடித்ததால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் அதிகார மீறலை கண்டித்து மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.
மேலும் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் 3 மாத காலக்கெடுவை விதித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார். இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு நீதிபதிகள் காலக்கெடு விதிக்க அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்தில் தலையிட்டால் அரசியலமைப்பில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நடைபெற்றது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் ஆலோசனை கோரியுள்ளார். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க பயன்படுத்தப்படக்கூடாது என தமிழகம் மற்றும் கேரளா அரசுகளின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அப்போது பேசிய பி.ஆர்.கவாய், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 அன்று அளித்த உத்தரவை மாற்றியமைக்காது.
ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்பதை ஒரு மேல்முறையீடாக கருத மாட்டோம். நீதிமன்றம் ஆலோசனை வழங்கும் பணியில் மட்டுமே ஈடுபடும்" என்று தெரிவித்தார்.
- மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகமாக இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கிய நிலையில், தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- கால அவகாசம் விதிப்பது அந்த பதவிகளின் கண்ணியத்தைக் குறைக்கும்.
- நீதிமன்றங்கள் எங்கள் அதிகாரங்களில் தலையிடுவது சரியான அணுகுமுறை அல்ல.
சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு இழுத்தடித்ததால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் அதிகார மீறலை கண்டித்து மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.
மேலும் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் 3 மாத காலக்கெடுவை விதித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு நீதிபதிகள் காலக்கெடு விதிக்க அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
"ஜனாதிபதி மற்றும் ஆளுநர் என்பது ஒரு ஜனநாயக அமைப்பில் உயர் பதவிகள். எனவே அவர்களுக்கு கால அவகாசம் விதிப்பது அந்த பதவிகளின் கண்ணியத்தைக் குறைக்கும்.
இந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டால், அது அரசியலமைப்பு பெருங்குழப்பத்திற்கு வழிவகுக்கும். நீதிமன்றங்கள் எங்கள் அதிகாரங்களில் தலையிடுவது சரியான அணுகுமுறை அல்ல.
அத்தகைய தலையீடு சில தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்" என்று மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
- நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
- அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நாகாலாந்து மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.
- 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
- மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த இவர், தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
பாஜக மாநில தலைவராகவும் இவர் இருந்துள்ளார். இதன்பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
- மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என மறுப்பு.
- அவர் நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஆவார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் திமுக பிரமுகரின் மனைவி எனக் கூறப்படும் நிலையில், அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி, ஜீன் ஜோசப் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.






