என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry abuse"

    • கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை.
    • போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

    இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 26 -ம் தேதி வசுமதி, தனது பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்டு திருமணமாகி வந்த நாளில் இருந்து தன்னிடம், கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி கொடுமை செய்து வருகிறார்கள். என்னை பற்றியும் தவறாக பேசுகிறார்கள். தினமும் டார்ச்சர் செய்வதால் என்னால் இங்கு வாழ முடியாது. என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறி கதறி அழுதார்.

    இதனால் அத்தியப்பன் நல்லிபாளையம் சென்று தனது மகள் வசுமதியை அழைத்துக்கொண்டு திருச்செங்கோட்டிற்கு வந்தார். இந்த நிலையில் மன வேதனையில் இருந்த வசுமதி கடந்த 30 -தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வசுமதி பரிதாபமாக உயிரிழந்தார் .

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத், மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை.

    இது தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரையும் கைது செய்தால் தான் வசுமதி, உடலை வாங்குவோம் என கூறி உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வசுமதியின் கணவர் வினோத் உள்பட 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இன்று 3-வது நாளாக வசுமதியின் பெற்றோர் தனது மகள் மரணத்திற்கு காரணமான 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை மகளின் உடலை பெறமாட்டோம் எனவும் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் 3-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் 4 பேரையும் பிடிக்க தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது.
    • மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி மாலதி(20). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் மாலதியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.

    • சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினார்
    • கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    உளுந்தூர்பேட்டை அருகே கிரிமேடு கிராமத்தில் வசிப்பவர் சந்திரலேகா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப டுத்தியதால் அவருடன் வாழாமல் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014-ல் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்திரலேகா புகார் அளித்தார். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் கடந்த 2015 முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி வெங்கடேஷ்குமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் சந்தி ரலேகாவை வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்திய கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதை யடுத்து கோ பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • 40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் கார்த்திகா (வயது 25). இவருக்கும், ராமர்பாண்டி ராஜா என்பவருக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது.

    40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கார்த்திகாவிடம் மேலும் ரூ.10லட்சம் ரொக்கம் வாங்கிவர வேண்டும் என்று கூறி கொடுமைபடுத்தி உள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகை பெற்றோர் வீட்டில் ராமர்பாண்டி ராஜா விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கார்த்திகா, ராமர்பாண்டி ராஜாவை சந்தித்து பேச சென்றுள்ளார்.அப்போது ராமர்பாண்டி ராஜா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன், ராஜாத்தி, ராஜேஸ்வரி, மீனாட்சி உள்பட 6 பேர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கார்த்திகா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார்.
    • சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சீதாலட்சுமி(34). இவருக்கும் அழகுமலை என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    அழகுமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார். சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும் வீட்டைவிட்டு செல்லுமாறு அவரை விரட்டியுள்ளனர். இது குறித்து சீதாலட்சுமி தேனி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தர வின்பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீ சார்வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
    • வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் 150 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க கடிகாரம், ரூ.1.30 லட்சம் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கினர்.

    இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரத்திலேயே சீர்வரிசையாக அணிந்து வந்த நகைகளை மாமியார் பெற்று கொண்டார். மேலும் சில மாதங்களில் பெண்ணிடம் கூடுதலாக 50 பவுன் நகை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்தார்.

    அதோடு பெண்ணின் பெற்றோர் வீட்டு சொத்தை தனது பெயரில் எழுதித் தர வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

    இதற்கு மறுத்த அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டில் வளர்த்து வரும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் காங்கோ சாம்பல் பறவையை கொத்த வைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    தொடர்ந்து இதுபோன்ற கொடுமை செய்து வந்ததால் அந்த பெண் புதுச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×