என் மலர்
நீங்கள் தேடியது "Madurai woman"
- பலத்த காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- இந்த சம்பவம் குறித்து காவலரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார். இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில், திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இது போக கூடுதலாக நகை மற்றும் பணம் வரதட்சணையாக வேண்டும் என்றும், வீடு கட்டி தர வேண்டும் என்றும் காவலர் பூபாலன் தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதில், கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளார்.
அப்போது, பூபாலன் தனது தங்கையை செல்போனில் தொடர்பு கொண்டு தனது மனைவியை வரதட்சணை கொடுமை செய்து தாக்கியதாக அவர் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில், காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன், அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான பூபாலனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக சகோதரி அனிதாவிடம் காவலர் பூபாலன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், தங்கப்பிரியாவை அடித்து துன்புறுத்தியதாகவும், அவளது வாயில் நகத்தை வைத்து பிராண்டியதாகவும், கழுத்தை பிடித்து நெரித்தாகவும், அவள் காலை மடக்கியதால் நொன்டி நொன்டி நடக்கிறால். அவளது உடம்பை நல்லபாம்பு நெழிப்பது போல நெழித்து எடுத்து விட்டேன். அதற்கு, பூபாலனின் தங்கை அனிதாவும் வாய் அதிகமாக பேசினால் இப்படி தான் அடிவிழும் என்று தங்கப்பிரியாவிடம் சொல்லிவிடு என்று தெரிவிக்கிறார்.
- காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார்.
- அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார். இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதில், கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளார்.
இதை தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில், காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன், அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான காவல் ஆய்வாளர் மற்றும் அவரது தந்தையை பிடிக்க 3 தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. 2013-ம் ஆண்டு மீண்டும் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி திறக்கப்பட்ட உடன், முதல் ‘பேட்ஜ்’-ல் மதுரையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரவிக்குமார் என்பவரின் மகளான காவியா (வயது 23) விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார்.
கட்டணம் அதிகமாக இருந்ததால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காவியா முறையாக பயிற்சி பெறமுடியாத சூழல் இருந்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தார். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் காவியாவுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மூலம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தடையின்றி தொடருவதற்கான வாய்ப்பு கிட்டியது.
மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தகுந்த கல்வி நிலையங்களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும் பயணிகள் விமானத்தை இயக்குவதற்காக தனியார் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3.72 லட்சம் உதவித்தொகையாக வருடத்துக்கு வழங்கப்படுகிறது.
இதுதவிர மாதாந்திர செலவுகளுக்காக ரூ.2 ஆயிரத்து 220, நோட்டு, புத்தகங்கள் வாங்குவதற்காக வருடத்துக்கு ரூ.3 ஆயிரம், நவீன வசதி உடைய கம்ப்யூட்டர் மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.45 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்த காவியா ரூ.20 லட்சம் உதவி பெற்று, ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 வருடத்துக்கு பின்னர் (1997-ம் ஆண்டு கடைசியாக உரிமம் வழங்கப்பட்டது) பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பயிற்சிக்கு இடையே, விமான ரேடியோ தொலைபேசி ஆபரேட்டர் உரிமமும் காவியா பெற்றுள்ளார்.
இதுகுறித்து அரசு விமான பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கமாண்டர் அமர்ஜித்சிங் டாங்கே கூறும்போது, விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி மீண்டும் திறந்த பின்னர் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் காவியாவுக்கு கிடைத்துள்ளது. இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறந்த மாணவராக அவர் திகழ்ந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.
உரிமம் பெற்றது குறித்து விமானி காவியா கூறியதாவது:-
விமானி ஆகவேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ ஆசை. மதுரையில் 12-ம் வகுப்பு படித்த பின்னர், அரசு விமான பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விரும்பினேன். ஆனால் அதற்கான கட்டணம் ரூ.25 லட்சம் ஆகும். இதனை என்னுடைய குடும்பத்தால், ஏற்பாடு செய்ய இயலாது. இருந்தபோதிலும் என்னுடைய பெற்றோர், கடுமையான கஷ்டத்துக்கு பின்னர் அங்கும், இங்குமாக ஓடி திரிந்து ரூ.6 லட்சம் கடன் வாங்கினார்கள்.
இதையடுத்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினேன். ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் என்பதால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து 46 மணி நேரமே பயிற்சி மேற்கொள்ளும் நிலை இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய பயிற்சி முழுவதுமாக தடைபட்டது. இதையடுத்து மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தேன்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர் வகுப்பு கல்விக்காக உதவும் மத்திய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் உதவித்தொகை கிடைத்தது. இதன்மூலம் எனக்கு 200 மணி நேரம் விமான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மத்திய அரசு அளித்த உதவித்தொகை என்னுடைய கனவை மீட்டெடுத்தது.
உதவித்தொகை கிடைத்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையை நான் பின்னோக்கி பார்த்தது இல்லை. விமானி ஆகவேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பணியில் சேருவதில் மிகுந்த ஆர்வம் இல்லை. விமான ஓட்டுனர் பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.






