கூடுதல் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்துக் கொலை.. உ.பி. பயங்கரம்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.
கூடுதல் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்துக் கொலை.. உ.பி. பயங்கரம்
Published on

உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கணவர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் .

மைன்புரி மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற அந்த 21 பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஜினி அண்மையில் கர்ப்பமாகி உள்ளார்.

ரஜினியை கணவர் சச்சினும் அவரது உறவினர்களும் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதை நிறைவேற்றத்தால், அவர்கள் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ராஜனியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரஜினி உயிரிழந்தார்.

பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ராஜனியின் தாயார் சுனிதா தேவி சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே தாயார் சுனிதா தேவி அளித்த குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு மற்றும் சஹ்பாக், உறவினர்களான ராம்நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.    

X

Maalai Malar
www.maalaimalar.com