ரிஷிவந்தியத்தில் தூக்கு போட்டு பெண் தற்கொலை

இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது.மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ரிஷிவந்தியத்தில் தூக்கு போட்டு பெண் தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி மாலதி(20). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் மாலதியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com