என் மலர்
நீங்கள் தேடியது "H raja"
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற கோரி இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின.
- கந்தர் மலை அல்ல, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள படம் கந்தன் மலை.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தி.மு.க.வும்,பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெறும் பிதற்றல்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்குகிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் கேட் குழுவில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இப்போது அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக கேட் உடன்படிக்கை தோற்றுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்றும், ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் அனைவரும் வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825 பில்லியன் டாலர். அதில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 60 பில்லியன் டாலர் மட்டுமே. இது மொத்த ஏற்றுமதியில் 7.25 சதவீதம் மட்டுமே. மற்ற நாடுகளோடு வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது மூலமாக வரக்கூடிய இழப்பை சரி முடியும்.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது அரசு செய்யும் கடமை என்றால் நாம் அரசுக்கு செய்யும் கடமை என்பது ஆன்லைனில் பொருட்களை வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். இலங்கைக்கு சொந்த பணத்தில் கப்பல் விட்டவர் தான் வ.உ.சி. அந்த கப்பலில் பணம் வாங்காமல் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த அளவிற்கு தேச பற்று உள்ளவர்.
சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே போதும் என விஜய் முடிவு செய்துள்ளார். சிறுபான்மை வாக்கிற்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளது, இந்துக்கள் வாக்கு வேண்டாம் என முடிவு செய்து இருப்பதையே காட்டுகிறது.
தி.மு.க.வும்,பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெறும் பிதற்றல். பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். 1999-ல் தி.மு.க வாஜ்பாய் அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தது. முரசொலி மாறன், வாஜ்பாய் அரசில் இடம் பிடித்திருந்தார். இது ரகசிய உறவோ கள்ள உறவோ இல்லை. நல்ல உறவு தான் வைத்து இருந்தது.
கல்வி கொள்கையில் தி.மு.க.வின் வழியை பின்பற்றி வரும் விஜய் முதலில் அரசியலை படியுங்கள்.1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்தது காங்கிரஸ் அரசு. தி.மு.க அரசு மவுனமாக ஆதரித்தது. இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாஜ்பாய் பேசினார்.
தமிழகத்தில் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ண மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இதை முதலில் படிக்காமல் கள்ள உறவு குறித்து பேசுகிறார். கச்சத்தீவை தாரை வார்க்கும் முன் காங்கிரஸ் சிந்தித்து இருக்க வேண்டும்.
ஆதரித்த காங்கிரசிற்கும் தி.மு.க.விற்கும் கள்ள உறவு உள்ளதா எனக்கு விஜய் பதில் சொல்லட்டும். காங்கிரசை ஏன் விஜய் கண்டிக்கவில்லை? கொஞ்சமாவது விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு பேசுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகமாக இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கிய நிலையில், தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார் என்று வைரமுத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி என்று எச். ராஜா விமர்சனம்
மயிலாப்பூரில் கடந்த 8-ந்தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடவுள் ராமரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.
வைரமுத்து பேசியதாவது:- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் குற்றம், குற்றம் கிடையாது என்று IPC கூறுகிறது. IPC-யில் கூறப்பட்டதை அன்றே கூறினார் கம்பர். ராமர் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி அல்ல என்று கம்பர் கூறுகிறார் என்றார்.
வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூத்த பாஜக தலைவர் எச். ராஜா, "அரசியலமைப்பின் முதல் பக்கத்தில் ராமரின் படம் தான் உள்ளது. ஆனால் வைரமுத்து ராமரை மனநோயாளி என்று பேசியுள்ளார். வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி. சின்மயி அவர் மீது புகார் கூறியுள்ளார். மேலும் பல பேர் அவர் மீது புகார் கூறியுள்ளார். இந்து விரோதி வைரமுத்துவுக்கு பெண்களை கண்டால் மனநோய். காமவெறி கொண்ட வைரமுத்துவை ஏன் இன்னும் திமுக அரசு கைது செய்யவில்லை. 2026 இல் வைரமுத்து செய்யப்படுவார்" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார்.
- படத்தின் போஸ்டரில் அவருக்கு ’தர்மபோராளி’ என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள "கந்தன் மலை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார். மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆகவே திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்று உருவாகியுள்ளதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது.
துவாக்குடி:
திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் அரசாங்கம் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது ஜனநாயகத்தின் குரல்வளை எப்படி எல்லாம் நெறிக்கப்பட்டது. தமிழகம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை எடுத்து கூறும் வகையில் இந்த விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெறுகிறது. இந்த நெருக்கடி கால கட்டத்தில் தமிழகத்தில் டில்லி பாபு, கேரளா ராஜா என பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படிப்பட்ட காங்கிரஸ் உடன்தான் தற்பொழுது தி.மு.க. கூட்டணி வைத்து உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி ஏற்ற பிறகு பொருளாதாரத்தின் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்து பாகிஸ்தான் 700 டிரோன்களை இந்தியா மீது ஏவியது. அதில் ஒரு டிரோன் மட்டுமே இந்திய எல்லையில் வந்து விழுந்தது. அதுவும் வெடிக்கவில்லை மற்ற டிரோன்கள் வானிலே தகர்க்கப்பட்டது. இனி குழந்தைகளுக்கு கூட சீனாவில் தயாரிக்கப்படும் ஏரோப்ளேன் பொம்மையை வாங்க மாட்டார்கள்.
இந்தியாவில் 550 டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. இதில் 100 நிறுவனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் தேவையான ஆயுதங்கள் இருப்பதுடன் வெளிநாட்டிற்கும் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
நமது நாட்டில் ராணுவத்தில் ஆகாஷ், பிரமோத் ஆகிய ஏவுகணைகள் உள்ளது. இது 200 கிலோ மீட்டர் தாண்டி உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடியது. 78 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு காப்பீடு வசதி பெறுகின்றனர்.
தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் தான் இருந்தது. தற்பொழுது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி எங்கு உள்ளது என்று பிரச்சனை இல்லை. அவர்கள் யார் அதிகம் தருகிறார்களோ அங்கு சென்று விடுவார்கள். வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது. ம.தி.மு.க. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டவரை தற்பொழுது தனது கட்சியில் சேர்த்துள்ளது.
பா.ம.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பி.ஜே.பி. தான் காரணம் என செல்வ பெருந்தகை கூறியது பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்றது. அப்படியொரு கேவலமான செயலை அவர் செய்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.
- எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
திருச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
என்டிஏ முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும். தலைவர்கள் முடிவு செய்வார்கள். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார். எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அதனால், திமுக இதுகுறித்து பேசி அசிங்கப்படாதீர்கள்.
திரும்ப திரும்ப அடுத்தவன் வீட்டு ஜன்னலில் எட்டி பார்க்காதீர்கள். அது அநாகரீகம். பக்கத்து வீட்டில் குழந்தைகள் ராத்திரியில் எப்படி வேணாலும் இருக்கும்.. அதை போய் எட்டிப் பார்ப்பீர்களா?
என்னுடைய வரம்பு மாநிலத்திற்கு உட்பட்டது. ஆனால், கூட்டணி பற்றி முடிவு செய்வது அகில இந்தியா தலைமைதான்.
கூட்டணி குறித்து பாஜகவும்- அதிமுகவும் பேசி என்ன முடிவு அறிவிச்சாலும் எனக்கு சம்மதம், எங்கள் கட்சிக்கு சம்மதம். எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
அமித்ஷா ஏற்கனவே சொல்லிவிட்டார். அவர் என்று வந்தார், கண்டார், வென்றார். அதனால்தான் மறுநாளே 6 மணி நேரத்தில் பதறியது தூத்துக்குடி.
இவ்வாறு அவர் கூறினார்.
- விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொMadras High Court, H Raja, சென்னை ஐகோர்ட், எச் ராஜாடர முடியாது.
- விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு எச்.ராஜாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றும் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறும் எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் காவல்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து எச்.ராஜா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- எங்கே ஓடி, ஒழிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
- ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் தி.மு.க. அரசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தெரியும்.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அறிக்கை வந்தவுடன் தி.மு.க. அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
எங்கே ஓடி, ஒழிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் குடும்பமே டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் தி.மு.க. அரசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தெரியும்.
ஊழலை மடைமாற்றும் விதமாக தி.மு.க. அரசு மும்மொழி கொள்கை குறித்து பேசியது அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தெரியவரும்.
ஆபரேசன் சிந்தூரில் ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணைகள் ரியல் ஹீரோவாக செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தும் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் மோடியின் பலவீனத்தை காட்டுகிறது என தமிழகத்தில் உள்ள முட்டாள்கள் பேசியுள்ளனர். நாட்டிற்கு எதிராக செயல்படுவதை ராகுல்காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.
- தி.மு.க. ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த கரிகாலன் கட்டிய சந்திர சுவாமிகள் கோவில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.
* வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.
* மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.
* வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த எது வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறினார்.
- நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்- ஆ ராசா.
- இந்துக்களை என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்... திமுக அமைப்பு ரீதியாக இந்து விரோதிகள் என தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது "கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை. நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம். கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம். நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்" என்றார்.
இதற்கு பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். ஆ.ராசா கருத்து தொடர்பாக ஹெச். ராஜா கூறியதாவது:-
திமுக-வில் இருக்கின்ற மாற்று மதத்தினர்களான முஸ்லிம்கள் குல்லா வைக்க வேண்டாம், கிறிஸ்தவர்கள் சிலுவை அணிய வேண்டாம் என ஆ. ராசா போன்ற இந்து விரோத சக்திகளுக்கு சொல்வதற்கு தைரியம் வருமா?.
இந்துக்களை என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்... திமுக அமைப்பு ரீதியாக இந்து விரோதிகள் என தொடர்ந்து சொல்லி வருகிறேன். அல்லேலுயா சொல்கின்ற ஒருவரை அறநிலையத்துறை அமைச்சராக வைத்துள்ளனர். அறநிலையத்துறையை அழிப்பதற்கு வைத்துள்ளனர்.
திமுக என்பது நச்சுப் பாம்பு, இந்துக்களை அழிப்பதற்கான ஒரு சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டனும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஹெச். ராஜா பதில் அளித்துள்ளார்.
- பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.
- எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.
தமிழ்நாட்டில் சாதி படுகொலை, ஆணவ படுகொலைகளை தூண்டி விடுபவர்கள் 2 பேர். ஒருவர் திருமாவளவன். இன்னொருவர் சுப.வீரபாண்டியன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக சுப.வீரபாண்டியன் கூறியதாவது:
* நாங்கள் பிறந்த பிறகு தான் மனுநீதி எழுதப்பட்டதா? அதற்கு முன்னால் மனுநீதி இல்லையா?
* மனு நீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவ படுகொலைகளுக்கு காரணம்.
* பிரிவினை என்பதே இந்து சமயத்தின் நியதியாக இருக்கிறது.
* பிரிவினை கூடாது, சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள்.
* பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.
* அவர் எங்களை பார்த்து குற்றம்சாட்டுவதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது.
* இப்படி பேசுவது கருத்து உரிமையில்லை. அவதூறு.
* எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.
* எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என எண்ண தோன்றுகிறது. அவர் நாகரீகமாக பேசினால் தான் ஆச்சரியம்.
இவ்வாறு அவர் கூறினார்.






