கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்

பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது என்னுடைய பெயரை இழுத்து விட்டு தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் அண்ணாமலை பேசி இருக்கிறார்.
எச்.ராஜா
எச்.ராஜா
Published on

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, கோவில் நிலங்கள் தொடர்பாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உண்மைக்கு புறம்பாக

பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது என்னுடைய பெயரை இழுத்து விட்டு தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் அண்ணாமலை பேசி இருக்கிறார். அதில் கோவில் இடத்தை பராதீனப்படுத்தலாம் என்று நான் கூறியதாக கூறி இருக்கிறார்.

இப்போதைய முதலமைச்சர் விஜய் அரசில் சபாநாயகர் சட்டசபையில் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். ஏன் குரானில் இருந்து தேவார பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டவில்லை? அப்படியானால் இந்த அரசு ஜனநாயக அரசு இல்லையா? இதை கண்டிக்க துணிச்சல் இல்லாத அரசியல் தலைவர்கள் எச்.ராஜா அப்படி பேசிவிட்டார் என்று நான் 2024-ல் பேசியதை தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசி இருக்கிறார்.

பொய்

நான் எடப்பாடி பழனிசாமியை 2 முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் நிலம், மனைகள், கட்டிடங்கள் அளக்கப்படவில்லை. கையகப்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி பேசி இருக்கிறேன். எந்த விதத்திலும் நான் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது கிடையாது.

நான் கட்சி பணிக்காக சென்ற போது உள்ளூர் விவசாயிகள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்பவே நான் அவர்களிடம் சொன்னேன். கோவில் இடங்களை கையகப்படுத்த முடியாது. தி.மு.க. அரசு மக்களின் பட்டா இடங்களை கைப்பற்றுவதை அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தேன். முதலில் அது கோவில் சொத்தா? பட்டா இடமா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இதை தவறாக சுட்டிக்காட்டி என் பெயரையும் சேர்த்து இழுத்து விட்டு பொய் கூறி இருக்கிறார் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com