என் மலர்
நீங்கள் தேடியது "Lieutenant Governor"
- அடுத்த கூட்டத்தொடரில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது.
பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சண்டிகருக்கு தனியாக துணைநிலை ஆளுநரை நியமிக்கும் வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அரியானாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே ஆளுநர்கள் உள்ளனர். தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசம் பஞ்சாப் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாப் ஆளுநாரால் நிர்வகிக்கப்பட்டுவரும் சண்டிகருக்கு, துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டால், தலைநகர் மீதான உரிமைகள் நீர்த்துப்போகச் செய்யும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சண்டிகருக்கு தனியே துணை நிலை ஆளுநரை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு கடுமையான அநீதி என்றும், பஞ்சாபின் தலைநகரைப் அபகரிக்க பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
- பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார் .
ஐந்து ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், மனோஜ் சின்ஹா தனது தவறை ஒப்புக்கொண்டார்.
"இது பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வகுப்புவாதப் பிரிவினைகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அங்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.
பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைப்பதில்லை என்பது காஷ்மீரில் பொதுவான நம்பிக்கை. இந்தத் தாக்குதல் திறந்தவெளி புல்வெளிகளில் நடந்தது. பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.
இந்தத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் சூழல் முற்றிலும் மோசமடைந்துவிட்டதாகக் கருதுவது தவறு. இது நாட்டின் மீதான தாக்குதல். பாகிஸ்தான் காஷ்மீரில் அமைதியையும் செழிப்பையும் விரும்பவில்லை.
இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தகுந்த பதிலடியாக இருந்தன. பயங்கரவாதம் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதற்கு அவை சான்றாக இருந்தன. ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் எந்தத் தாக்குதல்களும் நடக்கவில்லை.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது" என்று மனோஜ் சின்ஹா கூறினார்.
இதற்கிடையில், மத்தியில் ஒருவரைப் பாதுகாக்க துணை நிலை ஆளுநர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததாக காங்கிரஸ் விமர்சித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு சட்டம் ஒழுங்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது
- ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்
- கைலாஷ் கெலாட் பதவி விலகி பாஜகவில் இணைந்தார்
ஆம் ஆத்மியை சேர்ந்த டெல்லி முதல்வர் அதிஷி கெஜ்ரிவாலை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்ற டெல்லி பெண்களுக்கான இந்திரா காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (IGDTUW) 7வது பட்டமளிப்பு விழாவில் டெல்லி துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனா மற்றும் முதல்வர் அதிஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் , "டெல்லியின் முதல்வர் ஒரு பெண் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர் தனது முன்னோடியை விட [கெஜ்ரிவாலை விட] ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்றார்.பட்டமளிப்பு விழாவில் இதை பேசும்போது, மேடையில் இருந்த அதிஷியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாணவர்களிடம் பேசினார்.

சக்சேனா தனது உரையில் மாணவர்களிடம், "நீங்கள் முன்னேறும்போது, உங்களுக்கு நான்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் உள்ளன. முதலில் உங்களை மீதான உங்கள் பொறுப்பு, இரண்டாவது உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கான உங்கள் பொறுப்பு, மூன்றாவது சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் பொறுப்பு.பாலினம் என்ற கண்ணாடி உச்சவரம்பை உடைத்து, அனைத்துத் துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக நிற்கும் பெண்களாக உங்களை நிரூபிப்பது நான்காவது பொறுப்பு" என்று அவர் கூறினார்.
முன்னதாக கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த கெஜ்ரிவால், செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் அதிஷியின் பெயரை முதல்வராக முன்மொழிந்தார்.
இந்த முடிவு ஒருமனதாக ஏற்பட்டு அதிஷி முதல்வராகத் தேர்வாகினார். தேர்தலில் மக்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
அதன்படி அடுத்த வருட தொடக்கத்தில் டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மி மூத்த தலைவரும் அமைச்சருமான கைலாஷ் கெலாட் பதவி விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரியில் தணிக்கைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- கணக்குகளை முறையாக பராமரிப்பது அவசியமானது.
புதுச்சேரி அரசின் அலுவலக தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி கையாளும் அதிகாரிகளுக்கான கணக்குத் தணிக்கை நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆடிடோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கணக்குகளை முறையாக பராமரிப்பதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.
முறையாக பராமரிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், வீட்டுச்செலவு கணக்குகளையும் பராமரிக்க வேண்டுமென்று கூறினார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தணிக்கைத் துறை பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டமன்ற பேரவைத் தலைவர் செல்வம், பொது கணக்குக் குழுத் தலைவர்கே.எஸ்.பி.ரமேஷ், தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






