என் மலர்
நீங்கள் தேடியது "Jammu and Kashmir attack"
- உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரண்டு அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
இந்த ஊழியர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களுக்காக வேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லஷ்கர்-இ-தொய்பாவின் உதவியுடன், அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
- பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார் .
ஐந்து ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், மனோஜ் சின்ஹா தனது தவறை ஒப்புக்கொண்டார்.
"இது பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வகுப்புவாதப் பிரிவினைகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அங்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.
பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைப்பதில்லை என்பது காஷ்மீரில் பொதுவான நம்பிக்கை. இந்தத் தாக்குதல் திறந்தவெளி புல்வெளிகளில் நடந்தது. பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.
இந்தத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் சூழல் முற்றிலும் மோசமடைந்துவிட்டதாகக் கருதுவது தவறு. இது நாட்டின் மீதான தாக்குதல். பாகிஸ்தான் காஷ்மீரில் அமைதியையும் செழிப்பையும் விரும்பவில்லை.
இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தகுந்த பதிலடியாக இருந்தன. பயங்கரவாதம் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதற்கு அவை சான்றாக இருந்தன. ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் எந்தத் தாக்குதல்களும் நடக்கவில்லை.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது" என்று மனோஜ் சின்ஹா கூறினார்.
இதற்கிடையில், மத்தியில் ஒருவரைப் பாதுகாக்க துணை நிலை ஆளுநர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததாக காங்கிரஸ் விமர்சித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு சட்டம் ஒழுங்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
- பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்பின் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், பஹல்காமில் நடந்த கோழைத்தனமான செயலில் பல அப்பாவி உயிர்களை இழந்தோம். நாங்கள் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம். அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, இதற்கு பின்னால் உள்ளவர்களையும் நாங்கள் கண்டுபிடிப்போம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் அதற்கான பலனை காண்பார்கள் என நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கிய தற்கொலைத் தாக்குதலை இந்த சம்பவம் நினைவுபடுத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இன்று வெடித்த காரிலும் வெடிகுண்டுகள் மற்றும் ரசாயன பொருட்கள் ஏற்றி வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. காரில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #BlastInCar #JKAccident #PulwamaAttack #CRPFConvoy
மும்பை:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார். பயங்கரவாதிகளை ஒழித்து கட்ட ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றும் தெரிவித்தார். மராட்டிய மாநிலம் யவதாமில் நடந்த பொது நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
இந்திய பிரிவினைக்கு பிறகு ஒரு நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது, திவாலாகி கொண்டு இருக்கும் அந்த நாடு இன்று பயங்கரவாதத்தின் சின்னமாக இருக்கிறது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டுவது குறித்து ராணுவம் முடிவு செய்யும் பதிலடி கொடுப்பது குறித்து நமது வீரர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு மோடி பேசினார். #PMModi #PulwamaAttack #CRPF







