search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Pulwama attack"

  • போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன.
  • முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார்.

  செய்துங்கநல்லூர்:

  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக வல்லநாடு அருகே உள்ள கீழச்செக்காரக்குடி கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் மாபெரும் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.

  போட்டிக்கு ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை டிராகன் வாரியர் பி அணியும், 2-ம் பரிசை புதியம்புத்தூர் முருகன் நினைவு கபடி அணியும், 3-ம் பரிசை டிராகன் வாரியர் சி அணியும், 4-ம் பரிசை அகிலம்புரம் இளைஞர் கபடி அணியும் பெற்றது.

  முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார். இரண்டாம் பரிசு 8,000 மற்றும் கோப்பையை கருங்குளம் ஒன்றிய துணை சேர்மன் லட்சுமண பெருமாள் வழங்கினார். கபடி போட்டியில் விளையாடிய அணிகளுக்கு ஆடைகளை பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சுப்பையாவும், விளையாட்டு உபகரணங்களை வடக்கு காரசேரி மாடசாமியும் அன்பளிப்பாக வழங்கினார்.

  • புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

  எட்டயபுரம்:

  கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது தற்கொலை படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

  இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளியின் தலைமையாசிரியர் இப்ராஹிம், உதவி ஆசிரியை இந்திரா, அ.தி.மு.க. நிர்வாகி ராஜகுமார் உட்பட ஏராளமான பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

  • கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்
  • கிரடாய் அமைப்பு சார்பாக இலவச வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையம் எதிரே வீடு கட்டும் பணிகள் நடந்து வந்தது

  கயத்தாறு:

  கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

  அவரது குடும்பத்திற்கு உதவும் விதமாக கிரடாய் அமைப்பு சார்பாக இலவச வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையம் எதிரே ஜின்னா தெருவில் வீடு கட்டும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய வீட்டினை அவர்களது குடும்பத்தினருக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கு கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.

  கயத்தாறு பேரூராட்சிமன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கிரடாய் அமைப்பு மாநில செயலாளர் அபிஷேக் முன்னிலை வகித்தனர். கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், கிரடாய் அமைப்பு மாநில தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

  நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் சபுரா சலிமா, கிரடாய் அமைப்பு மதுரை மாவட்ட தலைவர் ரமேஷ் கிருஷ்ணா, செயலாளர் முத்துவிஜயன், நெல்லை மாவட்ட தலைவர் சிவக்குமார் தாஸ், செயலாளர் கோவிந்தன், துணை தலைவர் ரமேஷ் ராஜா, ஒப்பந்ததாரர் செய்யது முகம்மது, பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, பேரூர் துணை செயலாளர் குருசாமி, வார்டு கவுன்சிலர்கள் செல்வக்குமார், நயினார் பாண்டியன், செய்யது அலி பாத்திமா, கோகிலா, தேவி, ஆதிலட்சுமி, வக்கீல் மாரியப்பன், கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.
  புதுடெல்லி:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்புபடை வீரர்கள் வாகனங்களில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான்.

  இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவ விமானங்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்கி அழித்தன.


  உயிரிழந்த 40 பாதுகாப்பு வீரர்களுக்கு நாடுமுழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டன. அவர்களின் குடும்பத்தினர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

  இதற்கிடையே இன்று மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். மேற்குவங்காள மாநிலம் நாடியாவை சேர்ந்த ராணுவ வீரர் சுதீப் புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தார். அவருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

  இதையடுத்து சுதீப்பின் தாயார் மம்தா பிஸ்லாஸ், டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சுதீப்பின் தந்தை உடல்நிலை குறைவால் பங்கேற்கவில்லை. இதே போல புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு வீரரான மேற்கு வங்காள மாநிலம் ஹவ்ரக்சை சேர்ந்த பப்லூ சாந்த்ராவின் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

  ஆனால் பஞ்சாப், இமாச்சலபிரதேச மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் குடும்பத்தினர் தங்களுக்கு மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம் என்றும் தெரிவித்தார்.

  மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் மோடி விழாவில் பங்கேற்க இருப்பதாக மம்தாபானர்ஜி அறிவித்து இருந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

  இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர்கள் 56 பேர் அரசியல் படுகொலை செய்யப்பட்டதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இங்கு அரசியல் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் என்னை உங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தடுத்து விட்டது’ என்றார்.

  இதற்கிடையே தான் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா தரப்பில் கூறும் போது, ‘உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெருமை அளிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  வீரர்களின் உயிர் தியாகத்தை மோடி அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அரசியல் சாயம் பூச முயலும் மம்தா பானர்ஜிக்கு பதிலடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
  காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பசியால் தவித்தபோது மத்திய துணை ராணுவப்படை வீரர் உணவூட்டும் வீடியோ வைரலாகிவரும் வேளையில் அவருக்கு பாராட்டுகளும் குவிகின்றது.
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

  இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.

  அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.

  தனது டிபன் பாக்ஸை அந்த சிறுவனிடம் நீட்டியபோது அதை வாங்கி சாப்பிட முடியாதவாறு கைகள் செயல்படாத நிலையில் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த இக்பால் சிங், தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயை கழுவிவிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.  இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

  பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கை எங்களது பயிற்சிக்காலத்தில் கற்றுத்தரப்பட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு நான் உதவி செய்தேன். இந்த சம்பவம் வீடியோவாகி இப்படி பரவும் என்று எதிர்பார்த்து நான் அப்படி செய்யவில்லை என்று கூறும் இக்பால் சிங்குக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அளித்து கவுரவிக்க மத்திய துணை ராணுவப்படை உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

  பாகிஸ்தானில் 22 இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் இருப்பதாக இந்தியா கூறியதைபோல், எவ்வித தடயமும் இல்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.#PulwamaAttack #PakistanGovernment
  இஸ்லாமாபாத்:

  காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக கூறப்பட்ட நிலையில், இந்தியா சில ஆதாரங்களை, பாகிஸ்தான் அரசிற்கு சமர்ப்பித்தது. இந்த கோப்புகளை ஆராய்ந்த பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு குறித்து, இந்தியா  6 பகுதிகளாக 91 பக்கங்கள் உடைய  ஆவணங்களை சமர்ப்பித்தது. இந்த ஆவணத்தொகுப்பில் பாகிஸ்தான் மீதான பொதுவான குற்றச்சாட்டுகள் பல உள்ளன. முற்றிலும் பாராமல், புல்வாமா தாக்குதல் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மட்டும் தனியே எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இவற்றில் பாகிஸ்தானில் 22 இடங்களில் பயங்கரவாதிகள் முகாமிட்டு செயல்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் எவ்வித முகாம்களும் இல்லை. இந்தியா இந்த இடங்களை பார்வையிட விரும்பினால், பாகிஸ்தான் அரசு அனுமதிக்க தயாராக உள்ளது. 

  மேலும் இந்த தாக்குதலில் தொடர்புள்ளதாக கூறப்பட்ட 54 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த விவரங்களை விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெளிவாக கூறுகின்றனர்.  

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#PulwamaAttack #PakistanGovernment
  காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முஹம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க மேலும் ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. #Pakistanseeksevidence #Pulwamaattack
  இஸ்லாமாபாத்:

  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

  இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. மேலும், எல்லைப்பகுதியில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பாக இந்திய அரசிடம் உள்ள உளவுத்துறை தகவல்களும் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.

  ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையில், ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக இந்திய அரசு முன்னர் அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நடத்திய விசாரணை மூலம் அறியவந்த விபரங்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதருடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று பரிமாறி கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் அளித்திருந்த வாக்குறுதியின்படி, புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் இன்று இந்திய தூதரிடம் பரிமாறப்பட்டது.

  இவ்விசாரணையை மேற்கொண்டு முன்னெடுத்து செல்லும் வகையில் இந்தியாவிடம் இருந்து மேலும் சில ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Pakistanseeksevidence  #Pulwamaattack
  புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளதாக மத்திய புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். #PulwamaAttack
  ஸ்ரீநகர்:

  காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

  மனித குண்டாக செயல்பட்டு இந்த தாக்குதலை நடத்தியது அகில்தார் என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்தது . தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட முதாசிர் கான் என்பவன் தரல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

  அதில்தார், முதாசிர்கான் இருவருமே ஸ்மார்ட் போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.

  அந்த போனுக்கு அவர்கள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். இதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். அந்த போனில் இணைய தளம், பேஸ்புக், வாட்ஸ்- அப் சேவைகளையும் பெற்று இருக்கிறார்கள்.

  இந்த போன்களுக்கான சிம்கார்டை அமெரிக்காவில் இருந்து யாரோ வாங்கி பயங்கரவாதிக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க மத்திய புலனாய்வுத்துறை அமைப்பினர் அமெரிக்க உதவியை நாட உள்ளனர்.  மும்பையில் அதேபோல 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோதும் அவர்கள் வெளிநாட்டு சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர்.

  அவற்றை இத்தாலி நாட்டில் இருந்து பெற்று இருந்தனர். இந்த சிம்கார்டுகளை இத்தாலியில் உள்ள ஒரு நிறுவனம் மூலமாக ஜாவீத் இக்பால் என்பவர் வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இத்தாலி போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

  இதேபோல இப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களையும் கண்டுபிடிக்க புலனாய்வுத் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். #PulwamaAttack
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பந்திபோரா மற்றும் சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #MilitantsKilled
  ஸ்ரீநகர்:

  புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்நிலையில், பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரவு வரை நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

  பொதுமக்களை கேடயமாக பிடித்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். அதன்பின்னர் சண்டையின்போது ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


  இதேபோல் சோபியான் மாவட்டம் இமாம்சாகிப் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

  பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. #JKEncounter #MilitantsKilled