என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ. 1600 கோடியை வைத்து என்ன செய்வது? மத்திய அரசின் வெள்ள நிவாரண உதவி கடலின் ஒரு துளி என்கிறார் பஞ்சாப் முதல்வர்
    X

    ரூ. 1600 கோடியை வைத்து என்ன செய்வது? மத்திய அரசின் வெள்ள நிவாரண உதவி கடலின் ஒரு துளி என்கிறார் பஞ்சாப் முதல்வர்

    • 1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது?
    • அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பருவமழை இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீ்ர்த்தது. கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தது.

    மழை வெள்ளத்தால் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு முதற்கட்டமாக 13,800 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி 1600 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 12 ஆயிரம் கோடி ரூபாயை SDRF கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நிதியுதவி குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங்கிடம் என்.டி. டிவி கேள்வி எழுப்பியது.

    அதற்கு பகவத் மான் சிங் பதில் அளித்து கூறியதாவது:-

    1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது? அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பஞ்சாப் மாநிலம RDF-யை பயன்படுத்தி வந்தது. விவசாய பொருட்கள் விற்பனை, கொள்முதலுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டு, அவை சாலைகள், மண்டிகள் அல்லது விவசாயிகள் மொத்த விற்பனை சந்தைகளை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆர்டிஎஃப் எந்தவித காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. பாஜக அல்லாத அரசாங்க மாநிலத்தில் வழக்கமாக இது நடக்கும்.

    SDRF கணக்கு 2010/11-ல் உருவாக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் மாநிலம் 84 கோடி ரூபாய் பெற்றது. ஆனால், 184 ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2011/12-ல் 171 கோடி ரூபாய் பெறப்பட்டது. 159 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதேபோல் 2012/13 மத்திய அரசு 272 கோடி ரூபாய் அனுப்பியது. 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2013/14-ல் 194 கோடி ரூபாய் பெற்ற நிலையில், 236 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

    மொத்தமாக பஞ்சாப் மாநிலம் 5012 ரூபாய் பெற்றுள்ளது. அதிலிருந்து எஸ்டிஆர்எஃப் 3820 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் சட்டவிரோதம் அல்லது மறைக்க ஒன்றுமில்லை. அதில் 1200 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்த ரூ.12,000 கோடி எங்கிருந்து வந்தது? பாஜக உண்மையான தொகையுடன் ஒரு பூஜ்ஜியத்தைச் சேர்த்தது.

    இவ்வாறு பகவத் மான் சிங் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×