என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Bungalow"

    • மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
    • அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.

    கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.

    தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

    இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

    அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.

    முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.  

    • டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தனது எக்ஸ் பக்கதில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • 'அரசு வீடு, கார், செக்யூரிட்டி பயன்படுத்த மாட்டேன் என தங்கள் பிள்ளைகள் மீது பொய் சத்தியம் செய்தார்கள்'

    டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சிக்கு ஆம் ஆத்மி - பாஜக இடையே குடுமிப் பிடி சண்டை நிலவி வருகிறது. அதன் ஒரு பதியாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சமயத்தில் பங்களாவுக்குள் எப்படி ஆடம்பரமாக இருந்துள்ளார் பாருங்கள் என ஒரு வீடியோவை பாஜக ஐடி விங் வைரல் செய்து வருகிறது.

    தங்களை சாமானியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பற்றிய உண்மையை நாங்கள் [பாஜக] காட்டுகிறோம். பொதுப் பணத்தை அபகரித்து கெஜ்ரிவால் தனக்கென 7-ஸ்டார் ரிசார்ட்டைக் கட்டியுள்ளார் என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தனது எக்ஸ் பக்கதில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    உடற்பயிற்சி கூடம், sauna குளியலறை போன்ற வசதிகளுக்காக ரூ. 3.75 கோடி வரை செலவாகியிருக்கும் என பாஜக ஊகித்துள்ளது. மேலும் பங்களாவில் மார்பிள் கிரானைட் பொருத்த ரூ. 1.9 கோடி, , ஜிம் மற்றும் ஸ்பா பொருத்துவதற்கு மட்டும் ரூ. 35 லட்சம், இதர செலவினங்களாக ஒரு ரூ. 1.5 கோடி சேர்த்து மதிப்பிடலாம் என்று பாஜக கணித்துள்ளது.

    அரசு வீடு, கார், செக்யூரிட்டி பயன்படுத்த மாட்டேன் என தங்கள் பிள்ளைகள் மீது பொய் சத்தியம்செய்துவிட்டு டெல்லி மக்கள் வரிப்பணத்தைப் பணத்தை எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் பாருங்கள் என பாஜக கூறியுள்ள்ளது.

    ஆனால் இவை அனைத்தும் ஆதாரமற்ற வெற்று பொய்கள் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என கெஜ்ரிவால் தெரிவித்தார். 

    துணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை காலி செய்ய லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #Tejashwi #SupremeCourt
    புதுடெல்லி:

    பீகாரில் கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம். அப்போது கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. அவருக்கு துணை முதல்வருக்கான அரசு இல்லமும் ஒதுக்கப்பட்டது.

    பின்னர் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதாவுடன் கூட்டணியை மாற்றிக்கொண்டது. இதனால் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மாநில அரசை விட்டு வெளியேறியது. தற்போது தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சித்தலைவராக உள்ளார். அவருக்கு வேறு பங்களாவும் ஒதுக்கப்பட்டது.

    ஆனால் புதிய வீட்டுக்கு மாறாமல், துணை முதல்-மந்திரிக்கான அரசு வீட்டிலேயே அவர் தொடர்ந்து வசித்து வருகிறார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த 2 அமர்வுகள், துணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்விக்கு உத்தரவிட்டன.



    எனினும் இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார் தேஜஸ்வி. அங்கு இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, துணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை தேஜஸ்வி காலி செய்ய நேற்று உத்தரவிட்டது. மேலும் ஐகோர்ட்டு 2 முறை உத்தரவிட்டும் கேட்காமல் தொடர்ந்து நீதித்துறையின் நேரத்தை வீணடித்ததற்காக தேஜஸ்விக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.#Tejashwi #SupremeCourt
    ×