என் மலர்
நீங்கள் தேடியது "எம்எல்ஏ"
- போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.
செப்டம்பர் 2 அன்று அரியானாவில் உறவினர் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய சென்ற போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற ஹர்மீத் சிங்கை போலீசார் தேடி வந்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே அவருக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் ஹர்மீத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.
அந்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி என்றும் தனக்கு ஜாமீன் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றும் பேசியுள்ளார். மேலும் தனது சொந்த கட்சியினர் குறித்தும் அந்த பேட்டியில் அவர் குறை கூறியுள்ளார்.
- விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
- தனது கணவர் கொலை வழக்கில் நீதி பெற்றுத் தந்ததற்தாக முதல் மந்திரிக்கு நன்றி என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு பூஜா பால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
லக்னோ:
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வான பூஜா பால் பேசுகையில், தனது கணவர் கொலை வழக்கில் நீதியை பெற்றுத் தந்ததாக முதல் மந்திரி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியைப் பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பாலை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு அவரை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூஜா பால், சமாஜ்வாதி கட்சியினரின் பெண்களுக்கு எதிரான நிலையை இது காட்டுகிறது என கடுமையாகச் சாடினார்.
- கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
- அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
- ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் சம்பவம் தொடர்பான வழக்கில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஜெய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கேஷ் பாகர் மற்றும் மனீஷ் யாதவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள், மேலும் ஏழு பேருடன் சேர்ந்து, ஜெய்ப்பூரின் முக்கிய சாலையான ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2014 ஆகஸ்ட் 13 அன்று, இந்த குழு, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சவுத்ரி உட்பட, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பிரதான சாலையை சுமார் 20 நிமிடங்கள் முழுமையாக மறித்ததால், கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இந்த வழக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றவியல் சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்பதால், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் உடனடியாக ஜாமீனில் விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி, எம்எலஏக்களின் பதவி, தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ரத்து செய்யப்படும். இதனால், இந்தத் தீர்ப்பு இரு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பாதிக்காது.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு 3 மாதங்களாகியும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய ஆட்சியை அமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாராக இருப்பதாக பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்துள்ளார். 9 எம்.எல்.ஏ.க்களுடன் தொக்கோம் ராதேஷியாம் இன்று ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தார்.
அதன்பின் தொக்கோம் ராதேஷியாம் சிங் கூறியதாவது:-
மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாாக உள்ளனர். இதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம்.
நாங்கள் சொன்னதை ஆளுநகர் கேட்டுக்கொண்டு, மக்கள் நலனுக்கான நடவடிக்கை அவர் தொடங்குவார். இருப்பினும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு சமம். சபாநாயகர் தி. சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதை எதிர்க்கும் யாரும் இல்லை.
ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக மத்திய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்தார்.
எந்தவொரு சமாதான முன்னெடுப்பிலும் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என மெய்தி பிரிவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குகி சமூகத்தினர், மலைக் கிராமங்களுக்கான தனி நிர்வாகம்தான் அமைதிக்கான வழி எனத் தெரிவித்துள்ளது.
- கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
- இதில் பேசிய எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா, ஆண்களுக்கு 2 மதுபாட்டில் கொடுக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியதாவது:
கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை 3 முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?
மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது.
மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம்.
அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.
கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.
- பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடலை அவர் பாடினார்.
- நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்
பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆளும் ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் பங்கேற்றார்.
பிரபல பாடகி சாய்லா பிஹாரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ கோபால் மண்டல் மைக்கை எடுத்து ஆபாசமான பாடல்களை பாடத் தொடங்கினார்.
"பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடல் ஒன்றை அவர் மேடையில் பாடி அனைவரையும் கலங்கடித்தார்.
மேலும் மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை கையை பிடித்து நடனமாடிய அவர், அப்பெண்ணின் கன்னத்தில் 500 ரூபாய் தாளை ஒட்டவைத்தார். மைக்கில் தொடர்ந்து பேசிய கோபால் மண்டல், நான் நன்றாக நடனமாடுவேன் என பலர் கூறுகின்றனர்.
நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன் என்று கூறினார். எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை கடிந்து கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் கோயபல்ஸின் தத்துவம்.
- தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுதெல்லாம் எந்த வகையில் நியாயம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் கோயபல்ஸின் தத்துவம்.
பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று சொல்லவில்லை. ''பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டம் பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவுகள் எடுப்போம்'' என்று தான் 2024 மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்றைய தலைமைச் செயலாளர் திரு ஷிவ்தாஸ் மீனா அவர்கள், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தைத்தான் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தை படித்தாலே, அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்துவிடும். ஆனால், தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுதெல்லாம் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.
மருத்துவம் பயின்ற ஐயா அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கடிதத்தில் உள்ள உண்மையை மக்களுக்கு தெரிவிக்காமல், அவதூறு கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை அதைப்பற்றி திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் ஒரு தாய், மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.
- எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன்.
நாக்பூர்:
மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாசிக் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சரோஜ் ஆஹிர் என்பவர், பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது கைக்குழந்தையுடன் அவைக்கு வருகை தந்துள்ளார்.
இதுபற்றி ஆஹிர் கூறும்போது, நான் ஒரு தாய். மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை.
நான் தற்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன் என அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி பேசினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான சரோஜ் ஆஹிருக்கு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி குழந்தை பிறந்தது. அவையில் பங்கேற்பதற்கு முன்பு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.
- தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
- இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேதி:
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதவாளர்கள், பாஜகவைச் சேர்ந்த நகராட்சி தேர்தல் வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கூறுகையில், 'நானும் எனது ஆதரவாளர்களும் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபக் சிங் வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது ஆதரவாளர்கள் சிலரை தாக்கினார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பிரச்சனை ஏற்பட்டது' என்றார்.
+2
- நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சத்தியவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரமணிகண்டன் வரவேற்றார்.
இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில், பாகல்மேடு ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மாநில அயலக அணி துணைச்செயலாளர் ஜி.ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு உதயகுமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் காரில் வந்து மேடை அருகே இறங்கினார்.
அப்பொழுது அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் மின்சார சப்ளை செய்யாததால் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு செல்லலாம் என்று கூறியவண்ணம் பரிதவித்துக் கொண்டிருந்தார். இதன் பின்னர், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு புறப்பட்டார். அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு மீண்டும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இப்பிரச்சினையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






