என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka Assembly"
- கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
- ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது, கர்நாடகாவின் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் கோயில்கள் மற்றும் மடங்கள் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கர்நாடாகவில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல.
- சாவர்க்கரின் படத்தை வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும்?
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் பசவண்ணா, வால்மீகி, கனகதாசா, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களை வைக்க, சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து வீர சாவர்க்கரின் படத்தையும் சேர்த்து 6 தலைவர்களின் படங்களை பாஜக அரசு சட்டசபையில் வைத்துள்ளது.
இந்நிலையில் சாவர்க்கரின் படம் கர்நாடகா சட்டசபையில் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா தலைமையில் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாக கூறினார்.

அதனால்தான் அவர்கள் சாவர்க்கரின் உருவப்படத்தை சட்டசபை அரங்கில் நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக அரசுக்கு எதிராக ஊழல் பிரச்சினைகளை சட்டசபையில் நாங்கள் எழுப்ப போகிறோம் என்பதால் அவர்கள் இந்த புகைப்படத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசாரின் பங்கு மற்றும் தியாகங்கள் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள், ஆனால் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல, இப்போது இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ் என்று குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவர் கூறினார். சாவர்க்கரின் படத்தை சட்டசபையில் வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும் என்பது குறித்து சித்தராமையாவிடம் கேட்குமாறும் அவர் தெரிவித்தார்.
- முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 56.
சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,"எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும், மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு அவரது இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அளிக்கட்டும். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 12-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 11-ந்தேதி அங்கு தேர்தல் நடந்தது.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூரு எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டி முன்னணியில் இருந்தார்.

காங்கிரஸ் வெற்றி பெற்றதால் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது. 2 முறை தக்க வைத்த தொகுதியை பா.ஜனதா இழந்துவிட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. #Jayanagar #JayanagarCounting #KarnatakaCongress
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க.வை முதலில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவரால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், பதவி விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சட்டப்பேரவை இன்று கூடியது. முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் ரமேஷ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. சார்பில் சுரேஷ்குமார் நிறுத்தப்பட்டிருந்தார்.
ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ.க தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. இதனையடுத்து சபாநாயகராக ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் பதவியேற்றதையடுத்து மாலை 3.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. #KarnatakaAssembly #KarnatakaSpeaker
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. அதாவது ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் 2 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 15-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதாவது அதிகபட்சமாக பா.ஜனதா கட்சி 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேப் போல் காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி 38 இடங்களையும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதேப் போல் காங்கிரஸ் ஆதரவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்தது. இந்த கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இக்கூட்டணியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.
இருப்பினும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்புவிடுத்தார். அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான எடியூரப்பா கடந்த 17-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 19-ந்தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 111 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் அக்கட்சி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஆனால் வாக்கெடுப்பின் போது, பா.ஜனதாவுக்கு உறுப்பினர்கள் பலம் 104 ஆக மட்டுமே இருந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 3 நாளில் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி சார்பில் குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதைதொடர்ந்து அவர் நேற்று மாலை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார்.

இருப்பினும் குமாரசாமி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா மீண்டும் குதிரை பேரம் நடத்தி இழுக்கும் என கருதி, நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து காட்டுவேன் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடக சட்டசபையில் குமாரசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க உள்ளார். இதையொட்டி சட்டசபையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, சபாநாயகர் தான். இதனால் நாளை காலை சட்டசபை கூடியதும் முதல் பணியாக சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்த கூட்டணி அரசு சார்பில் சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும், துணை சபாநாயகர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ரமேஷ்குமார் நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனால் சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
அதேப் போல் துணை சபாநாயகராக ஜனதாதளம் (எஸ்) சார்பில், ஏ.டி.ராமசாமிக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்கள் கடந்த 16-ந்தேதி முதல் ஓட்டல்களில் தங்கவைத்து பாதுகாத்து வரப்படுகிறார்கள்.
ஆனால் அந்த எம்.எல்.ஏ.க்கள், தங்களது குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள் மீது எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஓட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு அவர் களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. #kumarasamy


ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக குமாரசாமியின் இந்த நிபந்தனைகளை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கும் நிலையில் உள்ளனர். அதே சமயத்தில் அதை ஈடுகட்டும் வகையில் அமைச்சரவையில் அதிக மந்திரி பதவிகளை பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை விட இரு மடங்கு எம்.எல்.ஏ.க்களை வைத்திருப்பதால் காங்கிரசுக்கு அதிக மந்திரி பதவிகளை விட்டுத்தர குமாரசாமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் சார்பில் 20 பேர் வரை மந்திரிகளாக வாய்ப்புள்ளது.

லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரசில் உள்ள லிங்காயத் எம்.எல்.ஏ.க்கள், தங்கள் சமுதாயத்துக்கு துணை முதல்-மந்திரி பதவி தரவேண்டும் என்று வலியுறுத்தியபடி உள்ளனர். காங்கிரசில் உள்ள 78 எம்.எல். ஏ.க்களில் 17 பேர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அது போல மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் உள்ள 36 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் லிங்காயத்துக்கள்.
எடியூரப்பா முதல்வராக நீடிக்க முடியாமல் போனதால் லிங்காயத் சமுதாய மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் லிங்காயத் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் துணை முதல்வராக வாய்ப்புள்ளது. இதையடுத்து லிங்காயத் எம்.எல்.ஏ.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்னூர் சிவசங்கரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே துணை முதல்-மந்திரியாக அவருக்கே அதிக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே சபாநாயகர் பதவி தனது கட்சியிடமே இருக்க வேண்டும் என்பதில் குமாரசாமி தீவிரமாக உள்ளார். காங்கிரசும் சபாநாயகர் பதவியை கேட்கிறது. சோனியா- குமாரசாமியின் இன்றைய பேச்சில் இது பற்றியும் முடிவு ஏற்பட உள்ளது. #KarnatakaElection2018 #Kumarasamy #Congress #KarnatakaAssembly

