என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Andhra"
- மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
- உள்ளுர் மக்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சுங்கச்சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. நேற்று தேர்வு முடிந்து தமிழகம் திரும்பிய மாணவர்களில் ஒருவரின் வாகனத்திற்கு, எஸ்.வி.புரம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, அந்த வாகனத்திற்கான பாஸ்டேக் வேலை செய்யவில்லை. இதனால் பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வாகனத்தை மட்டும் ஓரங்கட்டிவிட்டு, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்படி ஊழியர்கள் கூறி உள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் வந்து மாணவர்களை கலைந்துசெல்லும்படி அறிவுறுத்தினர். மேலும், மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் கூறினர்.
ஆனால் மாணவர்களோ ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை செல்ல விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது.
இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்திவருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது.
- 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார் கொத்தபள்ளி கீதா
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆக இருந்தபோது தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் பேரில் வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை.
இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து அப்பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகியோர் மீது ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கீதா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது நிரூபணமானதால் முன்னாள் எம்.பி.கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெய பிரகாஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து 4 பேரும் உஸ்மானிய ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் பரிசோதனை முடிந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பிரமுகரின் காரை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்தவர்கள் ஆந்திர கும்பல் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
- கொள்ளையர்கள் சித்தூர் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகரை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். தி.மு.க. பிரமுகர். இவரது கார் டிரைவராக பணியாற்றி வருபவர் பாளை தியாகராஜநகரை சேர்ந்த துரை (வயது40).
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரமசிவ அய்யப்பன் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 17 லட்சம் ரூபாயை எடுத்து வருமாறு கார் டிரைவர் துரையிடம் கூறினார்.
அதன்படி அவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சமாதானபுரம் எஸ்.பி. அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மகும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.
இது தொடர்பாக பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ஆகியோர் தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படைகள் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை கைப்பற்றி அதில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ பகுதியில் அதிகநேரம் செல்போன் பேசியவர்கள் தகவலும் சேகரிக்கப்பட்டது.
அப்போது கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (65) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். அங்கு கொள்ளை கும்பல் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
அப்போது சுப்பிரமணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று கொண்டிருந்தார். அவர்களை தனிப்படையினர் விரட்டி சென்றனர்.
இதையறிந்த கொள்ளையர்கள் சித்தூர் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்ட போது அதில் ரூ. 17 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரூ. 17 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த தனிப்படையினர் அதனை நெல்லை கொண்டு வந்தனர். தொடர்ந்து கொள்ளை கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.
175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், ஆட்சியமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிற்பகல் நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. வரும் 25-ம் தேதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அவர் சட்டமன்ற கட்சி தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், 30-ம்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெற்றி குறித்து ஜெகன் மோகன் ரெட்டி சமூக வலைத்தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த தேர்தல் வெற்றியானது மக்களின் வெற்றி. இது எதிர்பார்த்ததுதான். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்காளர்கள் பெருமளவில் தங்கள் உரிமையை நிலைநாட்டி ஜனநாயகத்தின் மதிப்பை மேம்படுத்தியமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
இதற்கிடையே தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதால் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவதாகவும் கூறினார்.
இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆந்திராவை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார் எனவும் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையில் திருப்பாலைவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிற்கவில்லை. அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பறக்கும் படையினர் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் 2 பைகளில் மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அவை ஆந்திராவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டவை என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் 10 மதுப்பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மது பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அருண் (31), சுந்தர்ராஜன் (32) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அருண் எண்ணூர் காட்டாங்குப்பத்தையும், சுந்தர்ராஜன் எர்ணாவூரையும் சேர்ந்தவர்.
கைதானவர்களுக்கு மதுகடத்தும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் கலால் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் சின்னநாகபூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.
காரின் உள்ளே 240 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் வந்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் கைது செய்யப்பட்டான். ஆர்.கே. பேட்டை கலால் போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயர் மற்றும் சின்னம் தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் அங்கு வந்து வேட்பாளர் மதுசூதன் குப்தாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019 #AndhraElections #JanaSenaCandidate
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் பகுதியை சேர்ந்தவர் வெங்கா ரெட்டி ஆவார். இவரது மகள் வைஷ்ணவி(20) ஓங்கோலில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், வைஷ்ணவி தன்னுடன் வகுப்பில் பயிலும் லிங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவனுடன் காதல் வசப்பட்டுள்ளார்.
இவர்கள் 2 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், 8 மாதங்களுக்கு முன் இவர்களுக்கிடையேயான காதல் வைஷ்ணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் வைஷ்ணவியை கண்டித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்து கடந்த 2ம் தேதி திருமணம் செய்ய வைஷ்ணவி வீட்டை விட்டு சென்று மர்கபூர் சென்றுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அந்த இடத்திற்கு விரைந்து, வைஷ்ணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக பெற்றோருக்கும் வைஷ்ணவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தந்தை, மகள் என்றும் பாராமல் வைஷ்ணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது.
வைஷ்ணவி மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷ்ணவியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக கூறுகின்றனர்.
இது தொடர்பாக தல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரகாசம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 கவுரவ கொலைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #AndraGirldead
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் இளம்பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியது.

கேரள பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து கேரள அரசுக்கு மனு அனுப்பினர். இதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர பெண்கள் கோட்டயம் வந்துள்ளதாகவும், அங்கிருந்து எரிமேலி வழியாக பம்பை சென்று சன்னிதானம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து ஏற்கனவே பல பெண்கள் சபரிமலை வந்து பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றுள்ளனர். இப்போது மேலும் 4 பெண்கள் சபரிமலை வந்திருப்பதாக வெளியான தகவல் சபரிமலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SabarimalaTemple