என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka CM"
- இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில காவல்துறையுடன் இணைந்து விசாரிக்கிறது.
- இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ள நெட்வொர்க், முறியடிக்கப்படும்.
பல்லாரி:
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய டெட்டனேட்டர், கம்பிகள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்த பயணி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி கோவையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் மங்களூரு சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:
முதற்கட்ட தகவல்களின்படி, வெடித்த பொருள் எல்இடி இணைக்கப்பட்ட கருவி என தெரிய வந்துள்ளது. சம்ப இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும், அதை எடுத்துச் சென்ற நபரின் பெயரும் வெவ்வேறானது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
சந்தேகப்படும் நபரிடம் டூப்ளிகேட் ஆதார் அட்டை இருந்தது. அதில் ஹூப்ளி முகவரி இருந்தது. இது ஒரு பயங்கரவாதச் செயல், கோயம்புத்தூர் மற்றும் வேறு இடங்களுக்கும் அவர் பயணம் செய்துள்ளது, பயங்கரவாதத் தொடர்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் புலனாய்வுப் பணியகம் (ஐபி) அதிகாரிகளும், மாநில காவல்துறையுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறது..
தேசிய புலனாய்வு அமைப்பின் 4 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையுடன் ஒருங்கிணைத்து செயல்படுகிறது. சந்தேகப்படும் நபர் மருத்துவமனையில் உள்ளார். அவர் சுயநினைவு திரும்பிய பிறகு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில் மேலும் விவரங்கள் தெரியவரும்.
இந்த சம்பவத்தில் பரந்த நெட்வொர்க் உள்ளது, அது முறியடிக்கப்படும். தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணையில் உண்மை தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மங்களூரு சம்பவத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் முதல் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையான ஆனைகட்டி வரை வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. மங்களூருவில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தேர்தல் போட்டியில் காங்கிரஸ் எவ்வளவு கீழ்நிலையில் உள்ளனர் என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது என்று கூறினார்.
- மாநிலத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிக்கு இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை "பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்றது" என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தேர்தல் போட்டியில் காங்கிரஸ் எவ்வளவு கீழ்நிலையில் உள்ளனர் என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:-
காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்ற முடிவு. காங்கிரஸ் அவநம்பிக்கையில் உள்ளதால் அவர்கள் இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்கள். காங்கிரஸிடமிருந்து இதுபோன்ற பல அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. விரக்தியின் காரணமாக மக்கள் அதிகமாக இலவசங்களை எதிர்பார்க்கிறீர்கள்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் விரும்புகிறது. மாநிலத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிக்கு இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்குப் புதியவர் என்பதால், இதே அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.
காங்கிரஸ் அரசு ஆறு மணி நேரம் (ஒரு நாளைக்கு) தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறியபோது, அவர்களால் எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார் கார்கே.
- கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் பயணம்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
அம்மாநிலத்தில் முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.
கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். தற்போது வரை எல்லாமே சரியாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் ஆட்சியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார்.
இன்று பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்லும் சித்தயாமையாவின் இந்த பயணம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையாவுக்கும், துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.கே.சிவகுமாருக்கும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையாவுக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
கர்நாடகாவின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு டுவீட் செய்துள்ளார்.
- காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம்.
பெங்களூரு :
தற்காலிக முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து 6 நாட்களுக்கு பிறகு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். அரசியலில் யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற மக்கள் ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த கட்சி அளித்த வாக்குறுதிகள் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, நமது மாநிலத்தின் நிதிநிலையை சீர்குலையாமல் பார்த்து கொள்வதும் அவர்களின் கடமை. இந்த விஷயத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக நாங்கள் பொறுப்புடன் பணியாற்றுவோம். நிலம், நீர் விவகாரங்களில் அரசியல் இல்லாமல் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் அரசை எச்சரிக்கை பணியை நாங்கள் செய்வோம். மாநிலத்தை வளர்ப்பதில் பெரிய சவால்கள் உள்ளன. கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
பா.ஜனதாவின் தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்து வருகிறோம். இந்த பணி பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதே கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். பா.ஜனதாவில் தலைமை பண்பு உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
சில பகுதிகளில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. தேர்தலுக்கு தயாராவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அதனால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. நாங்கள் மீண்டும் வீறு கொண்டு எழுவோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- கன்டீரவா ஸ்டேடியம் முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு :
கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அத்துடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேற்று காலை 9 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மந்திரிசபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. இதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு தலா 10 இடங்களும், காங்கிரஸ் மேலிடத்திற்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மந்திரி பதவியை பெறும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை டெல்லி சென்றனர்.
அதாவது எம்.எல்.ஏ.க்கள் வீரேந்திரா, கோவிந்தப்பா, டி.சுதாகர், ரகுமூர்த்தி, அஜய்சிங், யஷ்வந்த்ராஜ் கவுடா பட்டீல், எம்.சி.சுதாகர், பிரதீப் ஈஸ்வர், கிருஷ்ண பைரேகவுடா, என்.ஏ.ஹாரீஷ், சீனிவாஸ் மானே, ரிஸ்வான் ஹர்ஷத், ஈஸ்வர் கன்ட்ரே, ரகிம்கான், சிவராஜ் தங்கடகி, சி.எஸ்.நாடகவுடா, அசோக் ராய், கே.என்.ராஜண்ணா, கே.ஆர்.ராஜேந்திரா, விஜயானந்த் காசப்பன்னவர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டு கொண்டனர். அவர்கள் கட்சியின் இதர மேலிட தலைவர்கள் சிலரையும் சந்தித்து மந்திரி பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், தினேஷ் குண்டுராவ், பி.கே.ஹரிபிரசாத், யு.டி.காதர், ஜமீர் அகமதுகான், வினய் குல்கர்னி, தன்வீர்சேட் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தராமையா பதவி ஏற்கும் விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த விழாவில் அகில இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 6 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வருகை தரும் இந்த தலைவர்களுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த ஸ்டேடியமே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தின் உள்ளே வெடிகுண்டு பிரிவு போலீசார் அங்குலம், அங்குலாக சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை தலைமை செயலாளர் வந்திதா சர்மா கவனித்து வருகிறார். இந்த பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா நடைபெறும் ஸ்டேடியத்திற்குள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள், தீ பற்றும் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், கூர்மையான ஒளியை ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார்.
- அந்த காரின் ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான டொயட்டோ வெல்பயர் என்பது அந்த காரின் பெயர். இதன் விலை பெங்களூருவில் ரூ.96 லட்சம். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அப்படி இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று பார்ப்போம்...
ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்குகளும் இருக்கிறது. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இத்துடன் 143 எச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.
இவை ஒன்றிணைத்து 145 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியவை. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இருக்கைகள் ஒவ்வொன்றும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்ப முன், பின் நகர்த்தும் வசதியும். கால்களை வைக்க கீழ் பகுதியில் சிறிய மெத்தை போன்ற பகுதி இருக்கிறது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது.
இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான சீதோஷ்ண நிலை கன்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்ட்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது மிகசிறந்த பொழுதை நமக்கு தரும். அதுபோல் பின் இருக்கைகளில் 10.2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன. இந்த கார் 2020-ம் ஆண்டு தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
- ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு சிறப்ப விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர், ஜார்க்கண்டு முதல்வர் உள்பட பலர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது.
நாளை வரை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்தில் கை குலுக்கியும், கட்டி அணைத்தும் வரவேற்பு அளித்தார்.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்தில், உலக தலைவர்களை தவிர இந்திய மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர், ஜார்க்கண்டு முதல்வர் உள்பட பலர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சிறப்பு விருந்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு காங்கிரசும், ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடகா மாநிலம் ஹூப்பளியில் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், " கார்கே காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல, மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவரும் கூட. என்னை பொறுத்தவரையில் கார்கேவை அழைக்காதது தவறு. எனக்கும் பிற வேலை இருப்பதால் ஜி20 மாநாட்டின் விருந்துக்கு நானும் கலந்துக் கொள்ளவில்லை" என்றார்.
- தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.
- அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அழைப்பை நிராகரித்ததாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ராமர் கோவில் திறப்பு விழா, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் சௌத்ரி ஆகியோர் பங்கேற்காததை ஆதரிக்கிறேன்.
சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது. இது ராமர் மற்றும் 140 கோடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை.
பக்தியுடன் நடத்த வேண்டிய மதச் சடங்கை அரசியல் பிரசாரமாக மாற்றி, இந்துக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.
பாஜக மற்றும் சங்பரிவார் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் தவறான இந்துத்துவத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது.
- 'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது.
இது தொடர்பாக, நாடு முழுவதிலும் இருந்து எனக்கு தகவல்கள் வருகின்றன.
எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது. அதனால்தான் '400க்கு மேல்' என உளவியல் ரீதியாக போலி தோற்றத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர்.
'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் துறையில் 100 சதவீதம் பேர் கன்னடர்கள் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
- கடும் விமர்சனம் எழுந்த நிலையில் மசோதா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த மசோதா மீதான கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மசோதாவில் சில குழப்பங்கள் உள்ளன. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூடடத்தில் இந்த மசோதா குறித்து முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை. அதற்குள் மீடியாக்களில் செய்தி வெளியானது. அதில் சில குழப்பங்கள் உள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அதை களைவோம். விரிவான ஆலேசானை நடத்தப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்ததுபோல் கர்நாடக மாநிலத்தில் துக்ளக் அரசு இல்லை. சித்தராமையா அரசு நடக்கிறது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பரிசீலிப்போம்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா "சித்தராமையா தனது முதல் எக்ஸ் பதிவில் தனியார் செக்டாரில் 100 சதவீத இடஒதுக்கீடு என அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின் நிர்வாகப் பிரிவில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத பிரிவில் 70 சதவீதம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இறுதியாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கர்நாடகாவில் துக்ளக் ஆட்சி நடப்பதாக தெரிகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2வது குற்றவாளியாக அவரது மனைவி பார்விதியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, 3வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4வது குற்றவாளியாக தேவராஜ் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.