search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இவ்வளவு விலையா...?: சித்தராமையாவுக்காக வாங்கப்பட்ட சொகுசு காரில் ஆச்சரியப்பட வைக்கும் வசதிகள்
    X

    இவ்வளவு விலையா...?: சித்தராமையாவுக்காக வாங்கப்பட்ட சொகுசு காரில் ஆச்சரியப்பட வைக்கும் வசதிகள்

    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார்.
    • அந்த காரின் ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான டொயட்டோ வெல்பயர் என்பது அந்த காரின் பெயர். இதன் விலை பெங்களூருவில் ரூ.96 லட்சம். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    அப்படி இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று பார்ப்போம்...

    ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்குகளும் இருக்கிறது. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இத்துடன் 143 எச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.

    இவை ஒன்றிணைத்து 145 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியவை. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இருக்கைகள் ஒவ்வொன்றும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்ப முன், பின் நகர்த்தும் வசதியும். கால்களை வைக்க கீழ் பகுதியில் சிறிய மெத்தை போன்ற பகுதி இருக்கிறது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது.

    இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான சீதோஷ்ண நிலை கன்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்ட்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது மிகசிறந்த பொழுதை நமக்கு தரும். அதுபோல் பின் இருக்கைகளில் 10.2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன. இந்த கார் 2020-ம் ஆண்டு தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

    Next Story
    ×