என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "liquor bottles"
- 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்குமெயின் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே சுதந்திர தினமான நேற்று மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அனில் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் நல்லதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
போலீசார் சோதனையில் மதுபான கடையில் 500 மது பாட்டில்களும் அருகாமையில் உள்ள அறை ஒன்றில் 1000 மதுபாட்டில்களும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகம் ஏற்படும் அளவிற்கு நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்த போது திடீரென ஓட தொடங்கினார். அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் நத்தவெளியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளவரசன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் தொடர்ந்து கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் வில்வ மணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னேரி அடுத்த கோளூர் சுடுகாட்டு முட்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற கோளூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சாராய வழக்குகளில் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பொதுத்தேர்தலின்போது 300 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
திருப்பதி:
திருப்பதியில் வெளிமார்க்கெட்டுகளில் விற்பனை செய்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப்பாட்டில்கள் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதி மாவட்டத்துக்கு பல்வேறு வாகனங்களில் கடத்தி வரபட்டு பறிமுதல் செய்து, அது சம்பந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சாராய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை முடிந்ததும், திருப்பதி பாலாஜி காலனி போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சாலையில் மதுபானப் பாட்டில்களை அடுக்கி வைத்து நேற்று ரோடு ரோலர் மூலம் அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு பங்ககேற்று மதுபானப் பாட்டில்களை அழிக்கும் ரோடு ரோலரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரோடு ரோலர் மதுபானப் பாட்டில்கள் மீது ஏறி நசுக்கி அழித்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடராவ், குலசேகர், சாந்தி பத்ரதல், கலால் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி மாவட்டத்துக்கு யாரேனும் மதுபானங்களை கடத்தி வந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மே மாதம் நடந்து முடிந்த பொதுத்தேர்தலின்போது 300 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 27 ஆயிரத்து 568 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர மாவட்டத்தில் சாராய வழக்குகளில் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுசார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிந்ததும், மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபானப் பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
- இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர்.
காக்காபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மார்க்கமாக தினமும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்றபடியே பரபரப்பாக காணப்படும்.
இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும், வாகனங்கள் செல்லாதவாறு ரோட்டில் நின்று கொண்டு அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் (கடை எண். 7165) யின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 15 குவாட்டர் பாட்டில், 10 பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். வழக்கம்போல் இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட் டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு சந்து கடை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1069 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகம் பின்புறம் கலால் பிரிவு வட்டாட்சியர் ராகவி முன்னிலையில் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் கென்னடி தலைமையிலான காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர். அழிக்கப்பட்ட மது பாட்டில்களில் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
- போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் 96 குழுவினர் இரவு நேர வாகன ரோந்து பணிகள் ஈடுபட்டு குற்ற செயல்கள் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் சமயத்தில் அந்தந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும். கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை கடத்துவதை தடுப்பதற்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
- 2 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் காரை க்காலில் இருந்து நாக ப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து மதுக் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்தாலும் கடத்தல்கா ரார்களும் பல்வேறு நூதன முறையில் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
நாகை நல்லியான் தோட்டம், வடக்குபொய்கை நல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டி ல்களை மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மறைத்து வைத்திருந்திருந்த 1180 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்பட்ட 6 மூதாட்டி உள்பட 9 போலீ சாரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கடத்தி லுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டி ல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
வெளி மாநில மதுபாட்டி ல்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடர் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படு பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
- திருச்சுழி அருகே மதுபாட்டில்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குலசேகர நல்லூர் பகுதியில் சாக்கு பையுடன் நின்று கொண்டி ருந்த குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் (வயது 51) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான கூறிவந்தார். இதில் சந்தேகம் அடைந்த போாலீசார் அவரது பையை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக சுமார் 75 மதுபான பாட்டில் கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சுழி போலீசார் அவற்றை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மேலகண்ட மங்கலம் பகுதியிலும் திருச்சுழி போலீசார் ரோந்து சென்ற போது அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்த கடம்பன் மகன் மருதுபாண்டி (வயது 33) என்பவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்த னர். பின்னர் மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டனர்.
அந்த காரில் வந்த சூலூர் வதம்பச்சேரி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அனுமதி இன்றி மதுபான பாட்டில்கள் கடத்தியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.
- வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த கலை மாதவன் (வயது 36), வேளாங்கண்ணி செட்டித்தெரு ஜெயமாதா இல்லம் பகுதியை சேர்ந்த ஜூடு அருள்பிரகாசம் ( 49) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்