டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர்.
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
Published on

காக்காபாளையம்:

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மார்க்கமாக தினமும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்றபடியே பரபரப்பாக காணப்படும்.

இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும், வாகனங்கள் செல்லாதவாறு ரோட்டில் நின்று கொண்டு அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் (கடை எண். 7165) யின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 15 குவாட்டர் பாட்டில், 10 பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். வழக்கம்போல் இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட் டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு சந்து கடை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com