என் மலர்
நீங்கள் தேடியது "road blockade"
- ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்
- போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் அருேக காரைக்காடு சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28-ந் தேதி வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஏழுமலை திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஏழுமலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று காலை இறந்த ஏழுமலை உடலை ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி முன்பு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் உடலுடன் உறவினர்கள் கடலூர் - சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் புகார் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும்.
- பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு உள்ளடக்கிய 1,000 ரூபாய் பணமும், அரிசி, சர்க்கரை பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கினர்.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இணைக்க கோரி திடீரென்று சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் அதி காரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாப்பாடு செய்து சாலையில் போட்டு உணவு அருந்தி நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில்பெரும் பரபரப்புஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அம்பலவாணன் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்ப ட்ட விவசாயிகளின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
- கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.
- உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். அவரது மகன் ராஜி (வயது 34). இவர் ஊரில் வேலை இல்லாமல் இருந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடநெமிலி பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மேஸ்திரி மூலம் மும்பையில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று ராஜி மும்பை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ெரயிலில் அடிபட்டு இறந்தார் என்று பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பின்னர்இறந்த ராஜியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்பந்ததாரர் முன்னிலையில் போலீசார் ராஜி உடலை ராஜி ஊரான மேல்வாழைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த ராஜி உடல் இன்று காலை மேல்வாழைக்கு வந்தது. இதை அறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது. ராஜியை மும்பையில் வேலையில் சேர்த்த மேஸ்திரி சங்கர் நேரடியாக இங்கு வர வேண்டும் என்று கூறி அவர்கள் இறந்த ராஜி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி அளி க்கபட்டது. அதனை தொட ர்ந்து போராட்டம் விலக்கி கொ ள்ள ப்பட்டது.
- வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை- திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 எண் உள்ள பஸ் 7 முறை சென்று வந்தது. இந்த நிலையில் தற்போது காலை 8.30 மற்றும் மாலை 5.30 ஆகிய இரு நேரங்களில் மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே கூடுதல் நேரங்களில் பஸ்கள் இயக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை-திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழி மறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர்.
- ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டி.ஜி.பி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மாதர் சங்கத்தினர் அறிவித்தி ருந்தனர்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான மாதர் சங்க நிர்வாகி களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மறியலில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கங்கை கொண்டான் அருகே உள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
- தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
கயத்தாறு:
நெல்லை மாவட்டம், மானூர் யூனியனுக்கு உட்பட்டது கங்கை கொண்டான் அருகே உள்ள வெங்டாசலபுரம், ராஜபதி, கரிசல்குளம் கிராமங்கள்.
சாலை மறியல்
இந்த கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த 3 கிராமத்தை சேர்ந்த 150 பெண்கள், 60 ஆண்கள் உள்ளிட்ட 210 பேர் இன்று கங்கைகொண்டான் நாற்கர சாலையில் இருந்து ராஜபதி கிராமத்திற்கு செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
அப்போது தங்கள் கிராமத்தில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நாளை மறுநாள் அதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்கள் போராட்டத்தால் காலை 9 மணி முதல் 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- புதுவையில் அமைப்பு சாரா சங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் தீபாவளி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
- இந்த நிலையில் கட்டிட தொழிலாளர்களுக்கு தற்பொழுது ரூ.3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதற்கு முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் அமைப்பு சாரா சங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் தீபாவளி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளாக அந்த தொகை சரிவர வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு இவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தீபாவளி உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் அரசை வலியுறுத்தி பல கட்ட போராடட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கட்டிட தொழிலாளர்களுக்கு தற்பொழுது ரூ.3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதற்கு முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
தீபாவளிக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அரசு இனியும் காலம் கடத்தாமல் கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் 3 ஆயிரத்து 500 ரூபாய், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உடனடியாக தீபாவளி உதவித்தொகை வழங்க வேண்டும். இந்த பணத்தை தீபாவளிக்கு முன்னதாக வங்கியில் செலுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடதப்பட்டது.
அதன்படி ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் தலைமையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஜென்மராகினி மாதா ஆலயம் முன்பு ஒன்று கூடினர்ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர்கள் தயாளன், முத்துராமன், மாநில துணைத்தலைவர் சேகர், ஏ.ஐ.டி.யூ.சி. அந்தோணி மற்றும் பலர் சட்டசபை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை தடுப்பு கட்டைகளை போட்டு போலீசார் தடுத்தனர்.
ஆனால் தடுப்பு கட்டைகளை கீழே தள்ளிவிட்டு அவர்கள் முன்னேறி சென்றனர். பின்னர் அவர்கள் ஆம்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் தீபாவளி உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி, பெரியக்கடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் துறை செயலர் வந்து இன்று மாலைக்குள் தீபாவளி உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறினர். இதனயைடுத்து முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
- அ.தி.மு.க .சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
- ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர்.
கடலூர்:
சட்டமன்றத்தி ல்எதிர்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க .சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர்சாலை மறியல் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் 4 முனை சந்திப்பில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், யூனியன் தலைவர் பக்கிரி, பகுதி செயலாளர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அ.தி.மு.க.வினர் தங்கள் போராட்டத்தை கைவிடாததால் போலீசார் 70 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது.
- காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- களத்தூரில் குடிநீர் வராததை கண்டித்து
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட டி.களத்தூர் கிராம ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை துறையூர்-மண்ணச்சநல்லூர் ரோடு டி.களத்தூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், டி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஒரு மணி நேரத்தில் ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டது.
அவனியாபுரம்
மதுரை அவனி யாபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக முக்கிய சாலையாக இருக்கும் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கருத்தான் சேர்வை தெருவில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவனியாபுரத்தில் இருந்து பெருங்குடி, விமான நிலையம், காரியாபட்டி செல்லும் அரசு பஸ்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது.
தகவலறிந்த அவனியா புரம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பாண்டி கவுன்சிலர்கள் கருப்புசாமி, முத்துலட்சுமி அய்யனார், உதவி பொறியாளர் முனீர் அகமது, நிர்வாக உதவி பொறியாளர் மைலநாதன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு மறியல் கைவிடப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்தில் ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டது.
- வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் நடைபெற்றது.
- ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.ஆனால் இதுநாள்வரை குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் மேற்படி நிலத்தை அளவீடு செய்வதற்காக தனி நபர் மற்றும் வருவாய்துறையினர் வந்தனர்.ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சங்கராபுரம் -கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் ஆகியோர் இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.