என் மலர்
நீங்கள் தேடியது "traffic jam"
- கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
- மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.
ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.
பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரங்களில் ஒன்று.
குறிப்பாக பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது இச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி உதவியை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நாடியுள்ளார்.
இதுகுறித்து அசிம் பிரேம்ஜிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விப்ரோ நிறுவன வளாகத்தின் வழியே சில குறிப்பிட்ட வாகன இயக்கத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக என்பதை ஆராய விரும்புகிறேன்.
ஒருவேளை அப்பாதையில் வாகனங்கள் பயணித்தால் பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 30% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
- தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.
- இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனது.
தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்தில், குருகிராமில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தபோது தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.
இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் சலித்துக்கொண்டனர்.
இந்த சூழலில், மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கி காத்திருந்த இளைஞர் ஒருவர் சோர்வடைந்து தனது பைக்கை தலையில் சுமந்து சென்றார்.
அவருடன் மற்றொரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒத்தாசையாக நடந்து சென்றார். அவர் பைக்கை சுமந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
- இந்த நெரிசலில் 4000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சிக்கித் தவித்தன.
- "வேலையில்லாமல் ஏன் மக்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்?" என்று அலட்சியமாக கேள்வி எழுப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர்-தேவாஸ் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட 40 மணி நேர போக்குவரத்து நெரிசலால் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த நெரிசலில் 4000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சிக்கித் தவித்தன.
இந்த நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தேவாஸ் வழக்கறிஞர் ஆனந்த் அதிகாரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வழக்கறிஞர், "வேலையில்லாமல் ஏன் மக்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்?" என்று அலட்சியமாக கேள்வி எழுப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றம் இந்த கருத்தை கடுமையாக கண்டித்தது. கடந்த செப்டம்பரிலேயே மாற்றுச் சாலையை நான்கு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டும், அது இன்னும் நிறைவடையவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த விவகாரம் தொடர்பாக NHAI, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுங்கச்சாவடி நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 7 அன்று நடைபெற உள்ளது.
- கங்கை கொண்டான் அருகே உள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
- தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
கயத்தாறு:
நெல்லை மாவட்டம், மானூர் யூனியனுக்கு உட்பட்டது கங்கை கொண்டான் அருகே உள்ள வெங்டாசலபுரம், ராஜபதி, கரிசல்குளம் கிராமங்கள்.
சாலை மறியல்
இந்த கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த 3 கிராமத்தை சேர்ந்த 150 பெண்கள், 60 ஆண்கள் உள்ளிட்ட 210 பேர் இன்று கங்கைகொண்டான் நாற்கர சாலையில் இருந்து ராஜபதி கிராமத்திற்கு செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
அப்போது தங்கள் கிராமத்தில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நாளை மறுநாள் அதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்கள் போராட்டத்தால் காலை 9 மணி முதல் 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது.
- தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட குயிலா பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம் புதுச்சேரி- தமிழக பகுதி களை இணைக்கும் பாலமாக அமைந்து வருகிறது.கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் குயிலாபாளையம் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால் வயல்வெளிகளில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு அதிகப்படியாக மழை நீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கி அதற்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குயிலாபாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வனத்தாம்பா ளையம், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ஒவ்வொரு பருவ மழை காலங்களிலும் தரைப்பாலம் மூழ்கி வெள்ளம் செல்வதால் அவ் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் பல கிலோ மீட்டர் சுற்றி வேலைக்கு செல்வதாகவும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பயந்து வீட்டிலே விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு குயிலா பாளையம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றங்கரையில் மேம்பா லங்கள் அமைத்து அப்பகுதி மக்களுடைய பாதுகா ப்பையும் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
- சாலை குறுகலாக உள்ள–தால் அடிக்கடி போக்கு–வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மெலட்டூர்:
தஞ்சையில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக திருக்கருகாவூர் வரையிலான நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், வெளியூரிலிருந்து காரில் தினசரி எண்ணற்ற சுற்றுலா வாகனங்கள் மற்றும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயி லுக்கு வந்து செல்லும் ஏராளமான பக்தர்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
மெலட்டூர் கடைவீதி உள்ள நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் மெலட்டூர் கடைவீதியில் நெடுஞ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது புறவழிச்சாலை ஏற்படுத்த அரசு நடவடிக்கை டுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
- திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்திகோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலில் இருமுடி செலுத்தும்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி செலுத்த வருவது வழக்கம்.
இந்த ஆண்டு இருமுடி செலுத்தும்விழா இன்று (23-ந்தேதி) தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து விரதம் இருந்து இருமுடி செலுத்த பஸ், வேன், கார்களில் இன்று அதிகாலை முதலே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் குவிந்தனர்.
இதனால் மேல்மருவத்தூர் பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதனால் இன்று அதிகாலை 5 மணி முதல் மேல்மருவத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 9 மணிவரை சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேல்மருவத்தூர் முதல் 4 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் நீண்ட வரிசையாக நின்றன. திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது. காலை 9 மணிக்கு பின்னரே வாகனங்கள் மெல்ல மெல்ல சீரானது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகையையொட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் இனிவரும் நாட்களில் கூடுதலான போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த பாலத்தின் உட்புறத்தில் 2 பக்கங்களிலும் இரு சக்கர வாகனங்கள் தள்ளுவண்டிகள் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் புதுவையில் இருந்து திருக்கனூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் தற்பொழுது சென்று வருகிறது.
இந்த பாலத்தின் உட்புறத்தில் 2 பக்கங்களிலும் இரு சக்கர வாகனங்கள் தள்ளுவண்டிகள் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களிலிருந்து வரும் பஸ்கள் இந்த மேம்பாலத்தின் உட்பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு ஏற்றியும் செல்கின்றனர்.
இதனால் மிகுந்த வாகன நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் பஸ்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்கின்றன.
பெரும்பாலும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அதிக அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே செல்கின்றன. இது குறித்து பொதுமக்கள் வில்லியனூர் போக்குவரத்து போலீசாரி டமும் திருபுவனை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நேரங்களில் ஒரு சில போலீசார் மட்டுமே நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதிக்கு வருகின்றனர்.
அவர்களால் உடனடியாக போக்குவரத்தை சரி செய்ய முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அதிக அளவில் மாலை நேரங்களில் போலீசாரை நியமித்து பாலத்தில் உட்பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதனால் காலை, மாலை வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதனால் காலை, மாலை வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாமக்கல் பஸ் நிலைய பகுதியில் பொக்லைன் கொண்டு குழிகள் தோண்டப்படுவதால், பஸ்களும், இதர வாகனங்க ளும் செல்ல முடியாமல் நீண்ட தொலைவுக்கு நிற்கின்றன.
அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதுபோல நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முதல் நல்லிபாளையம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் சாலையில் ஒரு புறமாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்புகள் ஏதும் இல்லாததால் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் காணப்படுகிறது.
இந்த பணிகளை மேற்கொண்டுள்ள சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை நகராட்சி நிர்வாகத்தி னர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலை, மாலை வேலைகளிலும் உரிய ஏற்பாடுகளுடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
மேட்டுப்பாளையம்,
சமவெளி பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் குளு,குளு சீசன் நிலவக்கூடிய இடங்களை தேடி சென்று வருகிறார்கள்.
அந்த வகையில் குளு, குளு சீசன் நிலவி வரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
நீலகிரிக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து தான் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 2 சாலைகள் செல்கிறது. ஒன்று குன்னூர் வழியாகவும், மற்றொன்று கோத்தகிரி வழியாகவும் செல்கிறது.
இந்த 2 சாலைகளையும் நீலகிரி மக்கள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த 2 சாலைகளிலும் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் மாவட்ட காவல்துறை போக்குவரத்து மாற்றமும் செய்துள்ளது.
அதன்படி கோத்தகிரியில் இருந்து கீழே வரும் வாகனங்கள், ராமசாமி நகர், ஊமைப்பாளையம், மச்சினாம்பாளையம் பகுதி வழியாக மேட்டுப்பாளையம் வந்து, பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்லாம்.
இதேபோன்று, குன்னூர் மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் சிறுமுகை சாலையில் தென்திருப்பதி நால்ரோடு வழியாக வந்து, அந்தந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் மாற்றுப்பாதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை வாரவிடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் நீலகிரிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர்.
இதனால் காலை 7 மணி முதலே மேட்டுப்பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலால் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஜடையாம்பாளையம் புதுமார்க்கெட் வரை 6 கி.மீ வரையும், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் குட்டையூர் வரை 4 கி.மீ வரையும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நின்ற இடத்தை விட்டு நகராமல் அப்படியே நிற்பதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் காருக்குள்ளேயே இருக்கும் நிலை உள்ளது.
எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது. இதுதவிர மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ், ஊட்டி செல்லும் சாலைகள் மிகவும் குறுகலான சாலை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வாகனம் நகர முடியாமல் மூச்சுமுட்டும் அளவுக்கு சிக்கி தவிக்கின்றன.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் சீசன் காலமாகும். தரைப்பகுதியில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கோடைவிடுமுறை காரணமாக இந்த மாத ங்களில் கொடைக்கான லுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க நகர்பகுதியில் ஒருவழிச்சாலை அமல்படுத்த ப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கனரக வாகனங்கள் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விதிமீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிடவசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர உணவகங்கள், தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் உத்தரவிட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனம் நகர முடியாமல் மூச்சுமுட்டும் அளவுக்கு சிக்கி நின்றது.
ஒருசில பயணிகள் கொடைக்கானலுக்கு ஏன் வந்தோம் என்று சொல்லும் அளவிற்கு திரும்பிச்செ ல்லும் நிலையும் ஏற்படுகிறது. சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கா னலில் பார்க்கிங் வசதி குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதே கிடையாது. இதனால் சுற்றுலா வாகன ங்கள் நினைத்த இடத்தில் நிறுத்திச்செல்வதும், அந்த வாகனங்களில் உள்ள பொருட்கள் திருடுபோவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சுற்றுலா வரும் இடத்தில் பயணிகள் தங்கள் பொரு ட்களை இழந்து செல்லும் அவலமும் உள்ளது.
இதுதவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். உணவகங்களில் கூடுதல் விலை வைத்து விற்பதும், காட்டேஜ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதும் தொடர் கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. கோடைவிழா தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற குறைபாடுகளை சீர் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






