மெலட்டூரில் புறவழிச்சாலை ஏற்படுத்தபடுமா?- பொது மக்கள் எதிர்பார்ப்பு

நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.சாலை குறுகலாக உள்ள–தால் அடிக்கடி போக்கு–வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடைவீதியில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடைவீதியில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Published on

மெலட்டூர்:

தஞ்சையில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக திருக்கருகாவூர் வரையிலான நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், வெளியூரிலிருந்து காரில் தினசரி எண்ணற்ற சுற்றுலா வாகனங்கள் மற்றும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயி லுக்கு வந்து செல்லும் ஏராளமான பக்தர்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.

மெலட்டூர் கடைவீதி உள்ள நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் மெலட்டூர் கடைவீதியில் நெடுஞ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது புறவழிச்சாலை ஏற்படுத்த அரசு நடவடிக்கை டுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com