search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே சாலைகளை சீரமைக்க கோரி 3 கிராம மக்கள் திடீர் மறியல்
    X

    மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை அருகே சாலைகளை சீரமைக்க கோரி 3 கிராம மக்கள் திடீர் மறியல்

    • கங்கை கொண்டான் அருகே உள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம், மானூர் யூனியனுக்கு உட்பட்டது கங்கை கொண்டான் அருகே உள்ள வெங்டாசலபுரம், ராஜபதி, கரிசல்குளம் கிராமங்கள்.

    சாலை மறியல்

    இந்த கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த 3 கிராமத்தை சேர்ந்த 150 பெண்கள், 60 ஆண்கள் உள்ளிட்ட 210 பேர் இன்று கங்கைகொண்டான் நாற்கர சாலையில் இருந்து ராஜபதி கிராமத்திற்கு செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது தங்கள் கிராமத்தில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நாளை மறுநாள் அதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்கள் போராட்டத்தால் காலை 9 மணி முதல் 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×