என் மலர்
நீங்கள் தேடியது "Female Police Officer"
- SWAT சிறப்பு ஆயுத பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தார்.
- உடற்பயிற்சி செய்யும் டம்பல் கொண்டு காஜலைத் தாக்கியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதியுள்ளார்.
கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட டெல்லி பெண் காவலர் ஒருவர், மருத்துவமனையில் ஐந்து நாட்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 27 வயதான காஜல் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவான SWAT சிறப்பு ஆயுதப்படைபப் பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தார்.
காஜலும் அங்குரும் நான்கு ஆண்டுகள் காதலித்து, கடந்த 2023 நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது காஜல் மீண்டும் கர்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காஜலின் கணவர் அங்குர் சவுத்ரி, உடற்பயிற்சி செய்யும் டம்பல் கொண்டு காஜலைத் தாக்கியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காஜலின் மூளை செயலிழந்தது.
காஜலிடம் கூடுதல் வரதட்சணையாகப் பணம் மற்றும் கார் கேட்டு அவரது கணவர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகக் காஜலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அங்குர் சவுத்ரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு பெண் கமாண்டோவிற்கே வரதட்சணைக் கொடுமையால் இந்த நிலை ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கி, முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தது.
- காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், பவானியின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டி கவுரவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது விடுமுறை நாளில், கைக்குழந்தையுடன் காக்கிநாடா- சாமர்லகோட்டா சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்தச் சாலையில் எதிர்பாராத விதமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தன.
இந்தநிலையில், அந்த வழியாக வந்த இரு ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி, முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தன. சைரன் ஒலித்தும் வாகனங்கள் நகர முடியாத சூழல் நிலவியது.
இதை கவனித்த ஜெயா, தான் பணியில் இல்லை என்பதை பொருட்படுத்தாமல், கையில் தனது கைக்குழந்தையை ஏந்தியபடியே உடனடியாக களத்தில் இறங்கினார்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை, ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மறு கையால் போக்குவரத்தைச் சீர்செய்தார்.
வாகனங்களை லாவகமாக அப்புறப்படுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல தனி வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது இந்தச் செயலால் ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது.
இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், ஜெயாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டி கவுரவித்துள்ளனர்.
ஜெயாவின் இந்த நெகிழ்ச்சியான செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
- CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
- 2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் (ASI) ஆக அருணா ஜாதவ் என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில், வாக்குவாதத்தின் போது தனது லிவ்-இன் பார்ட்னரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
சனிக்கிழமை காலை, குற்றம் சாட்டப்பட்ட CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இடையே ஏதோ ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திலீப் அருணாவை ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் மறுநாள் காலை காவல்துறையில் சரணடைந்தார்.
2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகி, அப்போது முதல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
- வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
- காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பிஸ்மி அல்மேரிஸ்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் நேராக மோதுவது போல வந்துள்ளார்.
இதனை பிஸ்மி அல்மேரிஸ் அவரை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் போலீசை தாக்கியவர் அரூர் அருகேயுள்ள பொய்யப்பட்டியை சேர்ந்த கருணாநிதி (எ) காளிதாஸ் (வயது 29) என்பதும், ராணுவ வீரரான அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை ராணுவ வீரர் தாக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






