என் மலர்
நீங்கள் தேடியது "crpf"
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இசட் பிளஸ் பிரிவில் இருந்து வருகிறார்.
- ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் சி.ஆர்.பி.எப். நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் துப்பாக்கி ஏந்திய சுமார் 12 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது நிகழ்வுகளில் அதாவது உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டி உள்ளது. அதாவது, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திட்டமிடாத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளது.
இது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இது தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சி.ஆர்.பி.எப்-ன் வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. மேலும் ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆனால், சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி வரும் ராகுல் காந்தியை மிரட்டும் செயல் இது என குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோல் சி.ஆர்.பி.எப். ராகுல் காந்திக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கட்வாவிலிருந்து உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த் கர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
- காயமடைந்த அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் பயணித்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல்களின்படி, CRPF படையின் 187வது பட்டாலியனின் பேருந்து, இன்று காலை சுமார் 10:30 மணியளவில் கட்வாவிலிருந்து உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த் கர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது 200 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
பேருந்தில் 18 வீரர்கள் இருந்தனர். இந்த விபத்தில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 15 வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
- 2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் (ASI) ஆக அருணா ஜாதவ் என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில், வாக்குவாதத்தின் போது தனது லிவ்-இன் பார்ட்னரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
சனிக்கிழமை காலை, குற்றம் சாட்டப்பட்ட CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இடையே ஏதோ ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திலீப் அருணாவை ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் மறுநாள் காலை காவல்துறையில் சரணடைந்தார்.
2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகி, அப்போது முதல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் தாக்கப்பட்டார்.
- காவி உடை அணிந்த பக்தர்கள் இழுத்துச் சென்று அடிப்பது அதில் பதிவாகி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் டிக்கெட் தொடர்பான தகராறில் கன்வார் யாத்ரீகர்களால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் தாக்கப்பட்டார்.
மிர்சாபூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ரெயில் ஏற காத்திருந்த சீருடையணிந்த அந்த வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவி உடை அணிந்த பக்தர்கள் இழுத்துச் சென்று அடிப்பது அதில் பதிவாகி உள்ளது.
இதுதொடர்பாக விசாரணைக்குப் பிறகு, ஏழு யாத்ரீகர்கள் கைது செய்யப்பட்டனர்.
- பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு.
- பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து பணம் பெற்றதை என்ஐஏ கண்டுபிடித்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மத்திய உளவுத்துறை, பாகிஸ்தானுக்கு ராணுவம் குறித்த தகவல்களை ரகசியமாக வழங்கியவர்களை கண்டுபிடித்து கைது செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோதி ராம் ஜாட் என்ற சிஆர்பிஎஃப் வீரரை தேசிய பாதுகாப்பு அமைப்பு (NIA) கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் புலனாய்வுத்தறை அதிகாரிகளுக்கு (PIOs) இவர் ராணுவம் குறித்த முக்கிய தரவுகளை பகிர்ந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து உளவுப்பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல வழிகளில் இருந்து பணம் பெற்றுள்ளார். இதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் மோதி ராம் ஜாட்டை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் மாதம் வரை என்ஐஏ விசாரணைக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்துள்ளார்.
- விசா காலத்தை மீறி அப்பெண்ணை இந்தியாவில் அவர் தங்க வைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி முனீர் அகமது, பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இதனை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு தெரியாமல் மறைத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக பேசிய CRPF செய்தித் தொடர்பாளராக டிஐஜி தினகரன், "பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்துள்ளார். மேலும், விசா காலத்தை மீறி அப்பெண்ணை இந்தியாவில் அவர் தங்க வைத்துள்ளார். இதற்காக முனீர் அகமது உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
- ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.
அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
- சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரின் பாஹல்காமில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இக்கோயிலில் குளிர்காலத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, அமர்நாத் யாத்திரை என்ற புகழ் பெற்ற யாத்திரையின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த யாத்திரை சந்தன்வாரி பகுதியில் ஆரம்பித்து கோயில் வரை நடைபெறும்.
தற்போது நடைபெற்று வரும் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்க, ஏராளமான சிஆர்பிஎஃப் படையினர் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
"யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உலகில் கிடைக்கக்கூடிய மிக நவீன தொழில்நுட்பத்தை பாதுகாப்பிற்கும் கண்காணிப்பிற்கும் பயன்படுத்துகிறோம். தெற்கு காஷ்மீர் பகுதியில் நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு பருந்து போன்ற விழிப்புணர்வுடன் சிஆர்பிஎஃப் செயல்பட்டு வருகிறது" என சிஆர்பிஎஃப் அமைப்பின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் அவஸ்தி தெரிவித்தார்.
அமர்நாத் யாத்திரைக்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் உள்ளதா என்று கேட்டதற்கு அவஸ்தி பதிலளித்திருப்பதாவது:
"குறிப்பிட்டு சொல்லும்படியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. எங்கள் வீரர்கள் ஓய்வெடுக்காமல் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்; 365 நாட்களும் பணியில் இருக்கிறார்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இருக்கிறோம். நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் யாத்திரை குழு சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு உள்ளூர் மக்களின் முழு ஒத்துழைப்பு உள்ளது. அவர்கள் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்குகிறார்கள்.
இவ்வாறு அவஸ்தி கூறினார்.
- நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் எல்லையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
- சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஸ்ரீநகர்:
நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 76-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், பணிக்கு இடையே பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். அனைவரும் ஒரு குடும்பம் போன்று தீபாவளியைக் கொண்டாடுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
- 48 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
- மார்ச் 7-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.
சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
மாநில அரசுகளும், கட்சித் தலைவர்களும் அந்ததந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்மறு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு நேற்று முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
- பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.
மாகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பேரனை அடித்ததற்காக மகனை தாத்தா ரைஃபிள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர், வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார்.
நாகபூரில் சிந்தாமணி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், நேற்று இரவு 4 வயதான தனது பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, முதியவர் லைசன்ஸ் பெற்று தான் வைத்திருந்த ரைஃபிள் துப்பாக்கியால் மகனை நோக்கி சுட்டுள்ளார்.
இதனால் மகனின் காலில் குண்டு பாய்ந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.காலில் குண்டு பாய்ந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்றார். மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.
டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை சரியாக 7.47 மணிக்கு சிஆர்பிஎப் பள்ளி அருகே பிரஷாந்த் விகாரில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரி அமித் கோயல் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த வெடிவிபத்து காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.






