என் மலர்
நீங்கள் தேடியது "BSF"
- பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்கள் ஊடுருவல்.
- சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் முகவரியை கண்காணிக்க முடியும்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது:
ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில் அண்மையில் அதிநவீன ஆய்வகத்தை எல்லை பாதுகாப்பு படை நிறுவி உள்ளது. அதன் முடிவுகள் எங்களுக்க மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதன் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் முகவரியைக் கூட பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிக்க முடியும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே ஊடுருவிய சுமார் 79 ட்ரோன்களை பி.எஸ்.எஃப். கண்டறிந்தது. இது கடந்த ஆண்டு 109 ஆக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் அது 266 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்களும், ஜம்முவில் சுமார் 22 ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீவிரமானது. அவர்கள் (பயங்கரவாதிகள்) ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒருவர் நேற்று மாலை நுழைய முயன்றுள்ளார். இதனைக் கவனித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.

இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இது. கடந்த 6ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தானியர், எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndoPakInternationalBorder #PakNationalHeld #BSF
திரிபுரா மாநிலம் ஆடாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, போலீசாருடன் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் சிறிய அளவில் சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா 258.5 கிலோ அளவிலான எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மீது போதைமருந்து தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Tripura #CannabisCaptured
வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் வழியாக தங்கம், போதை மருந்துகள் போன்றவை கடத்தப்படுவது அடிக்கடி நடந்துவருகிறது. இதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அமுதியா எல்லைப்பகுதியில் இருந்து 384.325 கிராம் கடத்தல் தங்கத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 12 லட்சத்து 33 ஆயிரத்து 684 என கணக்கிடப்பட்டுள்ளது.
இதேபோல், கோஜடாங்கா எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 39 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை ஆயிரத்து 300 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #WestBengal

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், கவாடா பகுதியில் உள்ள
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரான் என்ற இடத்தில் உள்ள எல்லை கம்பம் 1085 மற்றும் 1090-க்கு இடைப்பட்ட பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஒருவர் நுழைய முயன்றதை கண்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது பெயர் ராஜு என்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்த கைபேசியும் மூன்று சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #Pakistanimannabs #BSF
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 700 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் மீண்டும் முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூடு தாக்குதலை நேற்றிரவு 10.30 மணியளவில் நடத்தியுள்ளனர். சிறிய ரக ஆயுதங்களை கொண்டு ராம்கார் பிரிவில் நாராயணபூர் பகுதியில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மற்றும் கிராமங்கள் இலக்கிற்கு உள்ளாகின.
இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை கட்டுப்படுத்த பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோல் ஆர்னியா செக்டாரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். 3 இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. #JKFiring #CeasefireCiolation #PakistanTroops #PleadForCeasefire