என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்லைப் பாதுகாப்பு படையினர்"

    • BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
    • "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று BSF வீரரின் மனைவி ரஜனி அழுதார்.

    கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். ஆபரேசன் சிந்தூர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.

    இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹுவை இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது. இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் விடுத்துள்ளது.

    ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் சந்தேகப்படும் வகையில் சொகுசு வாகனத்தில் சுற்றிய 5 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
    பிகானர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சொகுசு காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.9.88 லட்சம் பணம் இருந்தது.



    இதுபற்றி காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதையடுத்து காரில் இருந்த 5 பேரையும் எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ.9.88 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் குஜராத்தில் வேலை செய்து வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 
    ×