என் மலர்
நீங்கள் தேடியது "கர்ப்பிணி மனைவி"
- BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
- ரஜனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசி ஆறுதல் கூறினார்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில், பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் நிலை குறித்து பேசிய ரஜனி, "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவர் அவர்களின் காவலில் உள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
BSF அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலைமை ஒரு போர் போல் உள்ளது. அடுத்து என்ன செய்தி வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
ஆபரேசன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா. சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷ்னி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானாள். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுக்தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று சேர்க்க முயன்றார். கட்டணம் அதிகம் கேட்டதால் சேர்க்காமல் கடைசியில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சுக்தேவிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், ரத்தம் செலுத்தினால்தான் உயிர் பிழைப்பாள், வெளியில் ரத்த வங்கியில் போய் வாங்கி வாருங்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் தவித்த அவர் மனைவி உயிரை காப்பாற்ற தனது 4 வயது சிறுமி ரோஷ்னியை விற்க முடிவு செய்தார். அங்குள்ள ஒருவரிடம் விற்று அந்தப் பணத்தின் மூலம் ரத்தம் வாங்கி ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அதன் பிறகு ரத்தம் செலுத்தப்பட்டு சுக்தேவி உயிர் பிழைத்தார்.
இதுபற்றி அரவிந்த் கூறுகையில், மனைவி உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். தாய் சுக்தேவி கூறும் போது, குழந்தையை விற்க மனம் இல்லை. எங்களுக்கு வேறு வழியில்லை, பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர் என்றார். #pregnantwife #Kannauj






