என் மலர்
நீங்கள் தேடியது "அட்டாரி வாகா எல்லை"
- நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாபில் அமைந்துள்ள பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி மாலை துவங்கியது.
இந்த கொடியிறக்க நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். மேலும் பைக் சாகச நிகழ்ச்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. ஆயிரக்கணக்கான மக்கள் வந்தே மாதரம், ஜெயஹிந்த் முழக்கமிட தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்ட இந்நிலையில் இன்றைய நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெற்றது.
- இந்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
- பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது.
இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு பாகிஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை) அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.
முன்னதாக நேற்று, வியாழக்கிழமை, காலை 8 மணிக்கு பாகிஸ்தான் எல்லையை மூடியது. இதனால் பாகிஸ்தானியர்கள் வெளியேற முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்தனர். பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் 24 மணி நேரம் மவுனத்திற்கு பிறகு பாகிஸ்தான் தற்போது தங்கள் எல்லையை மீண்டும் திறந்துள்ளது. இதன்மூலம் எஞ்சியுள்ள பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது.
- அட்டாரி-வாகா எல்லைக் கடவையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன.
- 850 இந்தியர்கள் பஞ்சாபில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்தது.
அதில் பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த உத்தரவின் கீழ், நேற்று ஞாயிற்றுக்கிழமை, 12 பிரிவுகளின் கீழ் குறுகிய கால விசாக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற கடைசி நாளாக இருந்தது, மேலும் அட்டாரி-வாகா எல்லைக் கடவையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன.
கடந்த வாரம் மத்திய அரசு விசா ரத்து செய்ததாக அறிவித்த பிறகு, ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் எல்லையில் இருந்து இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த 4 நாட்களில், 14 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 850 இந்தியர்கள் பஞ்சாபில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை, 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பதால் அவர்கள் எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
- 530 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர விவசாயிகள் 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப் இன்று அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஞ்சாபில் அட்டாரி - வாகா எல்லை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பதால் அவர்கள் எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இங்கு பாதுகாப்பை அதிகரிக்க பிஎஸ்எஃப் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அறுவடைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறாதுள்ளது. 530 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக அமிர்தசரஸ், டர்ன் தரன், ஃபெரோஸ்பூர் மற்றும் பைசலாபாத் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடையை முடிக்கும்படி குருத்வாராக்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோதுமை அறுவடையில் 80% க்கும் அதிகமானவை நிறைவடைந்திருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவடை செய்து, பின்னர் தீவனமாகப் பயன்படுத்த வைக்கோலை சேகரிப்பது மிகவும் சவாலானது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
- அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
- இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
இந்நிலையில், 74-வது குடியரசு தினத்தையொட்டி சர்வதேச எல்லையையொட்டி பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.
பஞ்சாப் மாநில எல்லையான வாகாவிலும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.
- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
- வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வை ஆயிரக் கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
இது மட்டுமின்றி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், காவல் துறை மற்றும் சிறப்பு படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் அரசியல் தலைவர்கள், முப்படை வீரர், வீராங்கனைகள், மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு அட்டாரி- வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வை ஆயிரக் கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர்.
- அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
- இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.
இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச்சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல் எழுப்பினர்.






