என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினம்"

    • நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    மாஸ்கோ:

    இந்தியா முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

    அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்தியா-ரஷியா ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ: இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படுவது இன்றைய நவீன சவால்களை எதிர்கொள்ளும், இரு நாடுகளுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

    ஈரான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், உக்ரைன், நேபாளம், இலங்கை நாடுகளும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

    • நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.

    நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பஞ்சாபில் அமைந்துள்ள பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி மாலை துவங்கியது.

    இந்த கொடியிறக்க நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். மேலும் பைக் சாகச நிகழ்ச்சி, பல்வேறு  கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. ஆயிரக்கணக்கான மக்கள் வந்தே மாதரம், ஜெயஹிந்த் முழக்கமிட தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. 

    முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்ட இந்நிலையில் இன்றைய நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெற்றது. 

    • தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.
    • அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    அதில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.

    இந்நிலையில் இதற்கு திமுக எம்.பி. கனிமொழி இன்று பதிலளித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

    இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

    • தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு வந்து நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

    தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர்களில் சிலர் காலிஸ்தான் கொடிகளை அசைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், போலீசார் தலையிட்டு எந்த மோதலும் இல்லாமல் நிலைமையை தணித்தனர். பின்னர் தூதரக அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

    சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது.
    • ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம்

    79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், ஜனாதிபதி மற்றும் பிரதருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

    அதில், "பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது.

    உங்கள் நாடு உலக அரங்கில் தகுதியான மரியாதையைப் பெற்றுள்ளது மற்றும் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக பங்களிக்கிறது.

    இந்தியாவுடனான எங்கள் சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எங்கள் கூட்டு முயற்சிகள் மூலம், பல பகுதிகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.

    பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்துவதை இருநாடுகளும் ஆதரிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. 

    • தாய்நாட்டின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
    • அடுத்த மாதம் பிரதமர் மோடி 75 வயதை எட்டுகிறார்.

    79வது சுதந்திர தினமான இன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி பிரதமர் மோடி உறையற்றினார்.

    அப்போது பேசிய மோடி, 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் என்றும், ஒரு நூற்றாண்டு காலமாக நமக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

    தனிநபர்கள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உறுதியுடன் தாய்நாட்டின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் 100 ஆண்டுகால சேவை ஒரு பெருமைமிக்க பொற்காலம் என்றும் மோடி கூறினார். மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை புகழ்ந்து பேசினார்.

    இந்நிலையில் சுதந்திர போராட்டத்தை எதிர்த்த ஆர்எஸ்எஸ்-ஐ புகழ்ந்து உண்மையான தியாகிகளை மோடி அவமானப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    தடைசெய்யப்பட்டிருந்த ஒரு மதவெறி அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் வரலாற்று கொண்டாட்டத்தை மோடி அவமதித்ததாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    மோடிக்கு அடுத்த மாதம் 75 ஆக உள்ள நிலையில் ஆர்எஸ்எஸ்-ஐ தூக்கிப் பிடித்து தனது ஓய்வு வயதை தள்ளிப் போட பிரதமர் நகர்வு இது எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், செங்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ மோடி புகழ்ந்தது அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறிய செயல். அடுத்த மாதம் 75 வயதை எட்டிய பிறகு தனது பதவிக் காலத்தை நீட்டிக்க பிரதமர் அந்த அமைப்பை திருப்திப்படுத்துகிறார் என குற்றம் சாட்டினார்.

    • நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் சஞ்சய் சேத் மரியாதை ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

    • மாநிலம் முழுவதும் பெற்றோரிடம் பாசம் காட்டியதாக 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

    பெற்றோர்களை வயதான காலத்தில் பிள்ளைகள் கவனிக்காமல் தவிக்கவிடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்க மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    வயதான பெற்றோரை பாசம் காட்டி சிறப்பாக கவனித்துக் கொள்ளும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கப்படும் என அதில் கூறப்பட்டது.

    அதன்படி மாநிலம் முழுவதும் பெற்றோரிடம் பாசம் காட்டியதாக 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    சுதந்திர தினமான இன்று 199 பேருக்கு ஷ்ரவன் குமார் விருதுகள் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படட்டதாக தெரிவித்தனர். குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
    • டெல்லி செங்கோட்டையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    தலைநகர் டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    டெல்லியில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    டெல்லி செங்கோட்டையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அலங்காரமும் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் 5,000 பேர் நாடு முழுவதிலும் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர்டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், பாராகிளைடர்கள், வெப்பக் காற்று பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையவழி அச்சுறுத்தல், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;
    • இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘புதிய பாரதம்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினம் 'புதிய பாரதம்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    உலகின் மிகப் பழமையான குடியரசுகளைக் கொண்டிருந்தது இந்தியா. இது ஜனநாயகத்தின் தாய் என ஒப்புக் கொள்ளப்படுகிறது.

    சுதேசி என்ற கருத்து, மேக்-இன்-இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற முயற்சிகள் நமது தேசிய நோக்கங்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. இந்திய பொருட்களை வாங்கிப் பயன்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். உள்ளூர் பொருட்களை மக்கள் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது சுதேசி இயக்கத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் செயலாகும்.

    இந்த மாத தொடக்கத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி, நமது நாடு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடியது. இது நாட்டின் நெசவாளர்களையும் அவர்களின் தயாரிப்புகளையும் கவுரவிப்பதற்காக 2015 முதல் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும். 1905-ம் ஆண்டு நமது சுதந்திரப் போராட்டத்தின்போது தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் இந்த நாளை கொண்டாடி வருகிறோம்.

    இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் வறுமையில் இருந்தது. அதன்பின் 78 ஆண்டுகளில், அனைத்துத் துறைகளிலும் நாம் அசாதாரண முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா சுயசார்பு தேசமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது, மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.

    காலநிலை மாற்றத்தின் சவாலுக்கு பதிலளிக்க நாமும் மாறவேண்டும். நமது பழக்கவழக்கங்களையும் நமது உலகக் கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும். நம் அனைவரின் பங்களிப்புடன், இயற்கையான முறையில் செழிப்பான வாழ்க்கையை வழங்கும் ஒரு கிரகத்தை எதிர்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வோம் என தெரிவித்தார்.

    • தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரபடுத்தியுள்ளது.
    • ந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் நாளை 79 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரபடுத்தியுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சென்னை அணுமின் நிலையம் பாபா அனு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

    தற்போது அங்கு பாதுகாப்பு கருதி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இருசக்கர வாகனம் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே அனுப்பபடுகிறது.

    குறிப்பாக வெடிகுண்டு சோதனைக்காக வேன் மற்றும் பேருந்துகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லியோ, மேக்ஸ், எனும் இரண்டு மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து வரக்கூடிய வாகனங்களை மெட்டல் டிடெக்டர் சோதனை கருவி மூலம் சோதித்து அனுப்ப படுகிறது.

    • பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
    • பாகிஸ்தானின் சுதந்திர தின நாளை விமர்சித்து ராஜ் பவன் பதிவு வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

    அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திர தின நாளை விமர்சித்து பிரிவினையை தூண்டும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    ராஜ் பவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று 'ஆகஸ்ட் 14' - பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

    பல்வேறு போர்வையில் இதேபோன்ற சக்திகள் இன்றும் அதிகரித்து வருவதால், ஆழ்ந்த உணர்வுடன் இதே நாளை பாரதம் நினைவுகூர்கிறது. அவை பொய்கள் மற்றும் ஏமாற்றுச்செயல்கள் மூலம் தேசத்தின் தன்னம்பிக்கையை உடைக்கவும், நம் மக்களின் மன உறுதியைக் குலைக்கவும் முயல்கின்றன.

    தேசத்தின் உறுதியை பலவீனப்படுத்தவும், வரலாற்றை திரும்பி நிகழ்த்தவும் நயவஞ்சகம் செய்யும் அவர்களை, தன்னம்பிக்கை கொண்ட சுயசார்பு பாரதத்தின் அற்புதமான எழுச்சியில் மகிழ்ச்சி கொள்ளாத வெளிவிரோத சக்திகள் ஊக்குவிக்கின்றன.

    வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எண்ணத்தை நோக்கி நமது தேசம் அணிவகுத்துச் செல்லும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அவர்களின் தீய நோக்கத்துக்கு எதிராக ஒவ்வோர் பாரதியரும், குறிப்பாக தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தி - இஸ்லாமியர் பிரிவினையை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளது இணையத்தில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

    ×