என் மலர்
நீங்கள் தேடியது "ஜனாதிபதி முர்மு"
- ஜனாதிபதி திரவுபதி முர்மு போட்ஸ்வானாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- இந்தப் பயணத்தின் போது 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது.
காபோரோ:
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் காபோரோனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. கலாஹரி பாலைவனத்தில் உள்ள கான்சி நகரத்திலிருந்து 8 சிவிங்கி புலிகள் காப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இந்த நிகழ்வில் போட்ஸ்வானாவின் ஜனாதிபதி டூமா கிடியோன் போகோவும் கலந்துகொண்டார். இரு நாடுகளையும் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள், இடமாற்ற செயல்முறை குறித்து ஜனாதிபதிகளுக்கு விளக்கினர்.
அப்போது பேசிய ஜனாதிபதி முர்மு, இந்தப் பரிசு போட்ஸ்வானாவின் வனவிலங்கு பாதுகாப்புக்கான வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என தெரிவித்தார்.
அதன்பின் பேசிய போட்ஸ்வானா ஜனாதிபதி டூமா கிடியோன், இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்த சிவிங்கி புலிகள் சேரும். இது அதன் இனத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கு உதவும். இந்தியாவில் சிவிங்கி புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
8 சிவிங்கி புலிகளும் போட்ஸ்வானாவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும். வரும் வாரங்களில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இந்த சிவிங்கி புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படும். 2022ம் ஆண்டில் இந்தியா சிவிங்கி புலிகள் இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது.
அப்போது 8 சிவிங்கி புலிகள் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. 2023ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் வந்தன.
கடந்த 2022-ல் தொடங்கிய இந்த திட்டத்தின்படி மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில் தற்போது 27 சிவிங்கி புலிகள் உள்ளன. போட்ஸ்வானாவில் இருந்து வரும் 8 சிவிங்கி புலிகள் உடன் இந்தியாவில் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
- உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று பேசினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.
- ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
- அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்தார்.
இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு பதிவாகி உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அரியானா மாநிலம் செல்கிறார்.
- அங்கு அம்பாலா விமானப் படைத்தளத்தில் ரபேல் போர் விமானத்தில் பயணிக்கிறார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அரியானா மாநிலத்தின் அம்பாலாவுக்கு செல்கிறார்.
அங்குள்ள விமானப் படைத்தளத்தில் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கரூர் துயர சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
புதுடெல்லி:
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
- சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றார் நடிகை ஊர்வசி.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மோகன்லாலுடன் சிறிது நேரம் உரையாடினார்.
- சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ்
- எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், பார்க்கிங் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
- எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
- சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ்
புதுடெல்லி:
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார்.
தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே சிறப்பு ஆயுஷ் மையம், ஹெலிகாப்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதற்கிடையே, துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;
- இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘புதிய பாரதம்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினம் 'புதிய பாரதம்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகின் மிகப் பழமையான குடியரசுகளைக் கொண்டிருந்தது இந்தியா. இது ஜனநாயகத்தின் தாய் என ஒப்புக் கொள்ளப்படுகிறது.
சுதேசி என்ற கருத்து, மேக்-இன்-இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற முயற்சிகள் நமது தேசிய நோக்கங்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. இந்திய பொருட்களை வாங்கிப் பயன்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். உள்ளூர் பொருட்களை மக்கள் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது சுதேசி இயக்கத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் செயலாகும்.
இந்த மாத தொடக்கத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி, நமது நாடு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடியது. இது நாட்டின் நெசவாளர்களையும் அவர்களின் தயாரிப்புகளையும் கவுரவிப்பதற்காக 2015 முதல் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும். 1905-ம் ஆண்டு நமது சுதந்திரப் போராட்டத்தின்போது தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் இந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் வறுமையில் இருந்தது. அதன்பின் 78 ஆண்டுகளில், அனைத்துத் துறைகளிலும் நாம் அசாதாரண முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா சுயசார்பு தேசமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது, மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.
காலநிலை மாற்றத்தின் சவாலுக்கு பதிலளிக்க நாமும் மாறவேண்டும். நமது பழக்கவழக்கங்களையும் நமது உலகக் கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும். நம் அனைவரின் பங்களிப்புடன், இயற்கையான முறையில் செழிப்பான வாழ்க்கையை வழங்கும் ஒரு கிரகத்தை எதிர்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வோம் என தெரிவித்தார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்ற ஜனாதிபதி முர்மு காளி தேவிக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.
கொல்கத்தா:
ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடியா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்றார். அங்கு காளி சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தார். அதன்பின், சாமியை தரையில் விழுந்து கும்பிட்டார்.
அவருடன் மாநில கவர்னர் ஆனந்த போஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- குஜராத் பாலம் இடிந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
- பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணியளவில் யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாஹி ஆற்றில் விழுந்தன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பால விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் துயரமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் என தெரிவித்தார்.






