என் மலர்

  நீங்கள் தேடியது "Rafale"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, மனு தாக்கல் செய்தார்.
  • பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

  புதுடெல்லி:

  ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரிய மனுைவ சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

  பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க மனு தாக்கல் செய்தார். ரபேல் ஆர்டரை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக பிரான்சில் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

  தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பிரான்ஸ் அலுவலகத்தில் கொள்ளையடிக்க சிலர் முயன்றனர்.
  பாரிஸ்:

  பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம்  இருந்து இந்திய அரசு 59 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்கிறது.

  உரிய காலத்துக்குள் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும் பணிகளை கண்காணிக்கவும், இந்த போர் விமானங்களை பராமரிப்பது மற்றும் ஓட்டுவதற்காக இந்திய விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் இந்திய விமானப்படை சார்பில் தற்காலிக அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.

  பாரிஸ் அருகே செயின்ட் கிலவுட்ஸ் பகுதியில் டசால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் விமானப்படை கேப்டன் அந்தஸ்த்திலான ஒரு அதிகாரி தலைமையில் இந்திய விமானப்படையை சேர்ந்த சிலர் இங்கு தங்கியுள்ளனர்.  இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து சில மர்மநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை முயற்சியாக கருதப்படும் இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இந்த விவகாரம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த கணினி தகவல்கள் உள்ளிட்ட ஏதும் களவாடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. #CentralGovernment #Rafalecase
  புதுடெல்லி:

  ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

  இந்த தீர்ப்பை எதிர்த்தும், ரபேல் விவகாரத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான சில ஆவணங்களின் அடிப்படையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர்.

  இந்த மனுக்கள் மீது நாளை (30-ம் தேதி) விசாரணை நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது.  அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதால் இதுதொடர்பாக இவ்வழக்கின் கட்சிக்காரர்களுக்கு கடிதம் அனுப்ப மத்திய அரசு வக்கீல் அனுமதி கோரினார்.

  இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. எனவே, இவ்வழக்கு நாளைய தினத்துக்கு பதிலாக வேறொரு தேதியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #CentralGovernment #Governmentseekstime #Rafalecase #Rafalereviewpetition
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல் ரபேல் போர் விமானம் இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) இந்திய விமானப்படையில் சேரும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் தெரிவித்துள்ளார். #RafaleDeal #FranchAmbassador #India
  புதுடெல்லி:

  இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

  இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பெங்களூருவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கான சிறப்புரிமை எனக்கு கிடைத்தது. அப்போது ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்தோம். மேலும், சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், எல்லா வடிவத்திலுமான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதற்கு இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று குறிப்பிட்டேன்” என கூறி உள்ளார்.

  டி.வி. சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரபேல் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது, எங்களுக்கு கவுரவம். இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) முதல் விமானம் இந்திய விமானப்படையில் சேரும்” என குறிப்பிட்டார்.

  பெங்களூருவில் விமான கண்காட்சியில் ரபேல் போர் விமானம் கலந்து கொண்டு சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். #SmritiIrani #Rahul #RobertVadra
  புதுடெல்லி:

  பணமோசடி வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் உதவியாளரை ஜாமீனில் வெளி வரமுடியாத விதத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது.

  இதுகுறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறும்போது, “ராபர்ட் வதேராவின் தனி உதவியாளர் மனோஜ் அரோராவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. எனவே நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேரா தனது உதவியாளர் மனோஜ் அரோராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதை உறுதி செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.  மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற மக்களவையில், ரபேல் விவாதத்தின்போது ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது ராகுல்காந்தி கண் சிமிட்டியது ஒரு பெண் மந்திரியின் உணர்வுகளை காயப்படுத்துவது ஆகும். மேலும் இது சபையின் கண்ணியத்தை அவமதிப்பது போலவும் உள்ளது” என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது சக எம்பிக்களைப் பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. #RahulWinksAgain #LokSabha
  புதுடெல்லி:

  பாராளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மிகவும் காரசாரமாக பேசிவிட்டு, பின்னர் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். பின் தன் இருக்கைக்கு திரும்பியதும் அருகில் இருந்த எம்பியைப் பார்த்து கண்ணடித்தார். ராகுல் காந்தியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மீண்டும் பாராளுமன்றத்தில் ராகுல் கண்ணடித்த சம்பவம் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

  நேற்று ரபேல் விவகாரம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ஜாலியாக கண்ணடித்துள்ளார் ராகுல். அ.தி.மு.க எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசிக்கொண்டு இருந்தபோது அவருக்கு பின் வரிசையில் அமர்ந்துகொண்டு மேஜையை தட்டி உற்சாகப்படுத்தினார். பின்னர், ராகுல் காந்தி கண்ணடித்து சிரித்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி கண்ணடிக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

  அதில், “ராகுல் மீண்டும் கண்ணடித்துள்ளார். இந்த முறை ரபேல் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது கண்ணடித்துள்ளார். எனவே, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை” என குறிப்பிட்டுள்ளார். #RahulWinksAgain #LokSabha


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய்களையே பேசிவரும் ராகுல் காந்தி கும்பமேளாவுக்கு வந்து கங்கை ஆற்றில் தனது பாவங்களை கழுவ வேண்டும் என உ.பி. மந்திரி குறிப்பிட்டுள்ளார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங் இன்று வாரணாசி நகரில் பிரதமரின் ஆரோக்கிய காப்பீடு திட்டம் தொடர்பான அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

  அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்தார்த்நாத் சிங், ‘ரபேல் விவகாரத்தில் கடந்த இரண்டாண்டுகளாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறார். தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

  பிரயாக்ராஜ் (முந்தைய அலகாபாத்) நகரில் விரைவில் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவுக்கு ராகுல் காந்தி வர வேண்டும். இங்குள்ள கங்கை ஆற்றில் நீராடி அவர் பேசிய பொய்கள் தொடர்பான பாவங்களை கழுவிக்கொள்ள வேண்டும் என அவரை நான் அழைக்கிறேன். கங்கைத்தாய் அவரது பாவங்களை மன்னிப்பாராக!’ என குறிப்பிட்டார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடாளுமன்றத்தில் கேள்விகளை சந்திக்க மோடிக்கு துணிச்சல் இல்லை, அவரை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #AIADMK #Modi
  புதுடெல்லி:

  நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று 193-வது விதியின் கீழ், ரபேல் விமான ஒப்பந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் பேசியதாவது:-

  பிரதமர் மோடி, அரங்கேற்றப்பட்ட பேட்டியில் 90 நிமிடங்கள் பேசியுள்ளார். அதிலும் ரபேல் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ரபேல் பிரச்சினையில், தன் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு கிடையாது என்று அவர் கூறியது உண்மை அல்ல.

  ஒட்டு மொத்த நாடும் இந்த ஒப்பந்தம் குறித்து அவரிடம் நேரடியாக கேள்வி கேட்கிறது.

  பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்லிடம் இருந்து இந்த ஒப்பந்தம் பறிக்கப்பட்டது. ‘இரண்டு ஏ’ பெயர் கொண்டவரது பையில் ரூ.30 ஆயிரம் கோடியை மோடி போட்டார். அந்த நபர், மோடியின் அன்பு நண்பர்.

  காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கிறோம். அதற்கு பா.ஜனதா பயப்பட தேவையில்லை.

  இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

  அதனால், அ.தி.மு.க. எம்.பி.க்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாவது:-

  பிரதமர் மோடியை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கிறார்கள். இங்கே அமர்ந்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. உறுப்பினர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். பிரதமர் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு நாடாளுமன்றத்துக்கு வந்து கேள்விகளை சந்திக்கும் துணிச்சல் இல்லை.

  இப்போது என்னிடம் ஒரு ஆடியோ டேப் இருக்கிறது. கோவா மாநில மந்திரி விஷ்வஜித் ரானே, ரபேல் விவகாரம் தொடர்பான ஒரு கோப்பை முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆடியோ டேப்பை போட்டுக்காட்ட சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்.

  இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

  அப்போது, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு, “அந்த டேப் போலியானது, தில்லுமுல்லு செய்து உருவாக்கப்பட்டது. அது உண்மை என்று ராகுல் காந்தியால் அங்கீகரிக்க முடியுமா? அது பொய் என்று நிரூபணமானால், அவர் உரிமை பிரச்சினையை சந்தித்து, வெளியேற்றப்பட வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

  அதற்கு ராகுல் காந்தி, தன்னால் அதை அங்கீகரிக்க முடியாது, சபாநாயகர் அனுமதி இல்லாமல் போட்டுக்காட்ட மாட்டேன் என்று கூறினார்.

  இதனால் ஆவேசம் அடைந்த அருண் ஜெட்லி, “அது போலி என்று விஷ்வஜித் ரானே மறுத்துள்ளார். அது ராகுல் காந்திக்கே தெரியும். அதனால் பயப்படுகிறார். இந்த மனிதர் திரும்பத்திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவரது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது“ என்று கூறினார்.

  அப்போது ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.   #RahulGandhi #AIADMK #Modi 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று அருண் ஜெட்லி கூறினார். #RahulGandhi #ArunJaitley #RafaleDeal
  புதுடெல்லி:

  நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

  காங்கிரஸ் கட்சியின் கரங்கள், ஏற்கனவே ஊழலில் தோய்ந்துள்ளது. அதே பாணியில் நேர்மையான மோடி அரசை களங்கப்படுத்த ஊழல் புகார் சுமத்தப் பார்க்கிறது. போபர்ஸ் ஊழலில் சிக்கிய காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை.

  போபர்ஸ் ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு என்ன செய்தது? அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தது. கூட்டுக்குழு, கட்சி சார்பானது. அதனால், அக்குழுவால் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது. இதெல்லாம் தெரிந்துதான், போலியாக ஊழலை உற்பத்தி செய்து, மோடி அரசை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.  மேலும், ரபேல் விமான விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு தனது மனம் திருப்தி அடைந்து விட்டதாக கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு சொல்வதுதான் இறுதியான வார்த்தை. அதற்கு சவால் விட யாருக்கும் உரிமை கிடையாது.

  ரபேல் விவகாரத்தில் வெறும் விமானத்தின் விலைக்கும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானத்தின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. போர் விமானம் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாத ஜென்டில்மேன், காங்கிரசின் தலைவராக இருப்பது மிகவும் சோகமானது.

  ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர் விமானத்தின் விலையை வெளிப்படையாக கூறினால், அது எதிரிகளுக்குத்தான் சாதகம் ஆகிவிடும். தேச பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் செயல்படுகிறது.

  வெற்று விமானத்தின் விலையை காங்கிரஸ் ஆட்சிக்கால விலையை விட 9 சதவீதம் குறைவாகவும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையை 20 சதவீதம் குறைவாகவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

  முந்தைய ராணுவ ஒப்பந்தங்களில் சதிகாரர்களாக இருந்தவர்கள், இப்போது மோடி அரசு மீது விரல் நீட்டுகிறார்கள். அந்த நபருக்கு உண்மை என்றாலே பிடிப்பது இல்லை. கடந்த 6 மாதங்களாக இந்த சபையில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொய்யானது. பொய் சொல்வதில் அவர் பெயர் பெற்றவர்.

  இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.

  அருண் ஜெட்லி பேசிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் காகிதத்தில் விமானம் செய்து, அதை அருண் ஜெட்லியை நோக்கி வீசினர்.

  அவர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். “‘நீங்கள் இன்னும் குழந்தைகளா?” என்று அவர் கேட்டார்.  #RahulGandhi #ArunJaitley #RafaleDeal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளதால் 8-வது நாளாக இன்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. #WinterSession #ParliamentStalled
  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக ரபேல் விவகாரம், காவிரி விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்களின் அமளி காரணமாக 8-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. #WinterSession #ParliamentStalled
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் மற்றும் மேகதாது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentStalled
  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநிலங்களவையில் அலுவல்கள் முற்றிலும் முடங்கி உள்ளன.

  இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இன்றும் ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்களும், மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


  இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால், உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றும், அவையின் மையப்பகுதிக்கு வந்தும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இதன்மூலம் மாநிலங்களவை 7-வது நாளாக முடங்கியது. #WinterSession #ParliamentStalled