என் மலர்
நீங்கள் தேடியது "Rafaledeal"
- 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
- ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன.
இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு சமீபத்தில் ஒப்புதல் வாங்கிய நிலையில் தற்போது ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது.
தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
சென்னை:
காஞ்சீபுரம், வடக்கு, தெற்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
சின்ன காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகில் இருந்து தொடங்கிய பேரணிக்கு காஞ்சீபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. பெ.விசுவநாதன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ஜி.வி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் ரபேல் போர் விமான ஊழலுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷமிட்டனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும் முன்னாள் எம்.பி. பெ.விசுவநாதன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சுந்தரமூர்த்தி, ஜீ.வி. மதியழகன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் ரபேல் விமான ஊழல் குறித்து மனு கொடுக்க சென்றனர்.
கலெக்டர் அங்கு இல்லாத நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி நூர் முகமதுவிடம் காங்கிரசார் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். பேரணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.எல்.என்.எஸ். விஜயகுமார், அருண், கோபால், சத்யா, டிராவல்ஸ் ராஜேஷ், பன்னீர் செல்வம், சிவராமன், சுரேஷ், லிங்கேஷ், மணிகண்டன், தமிழ்செல்வன் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். #Rafaledeal #congress






