என் மலர்
நீங்கள் தேடியது "Fighter Jet"
- விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் பயனப்டுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த பிப்ரவரி 7 அன்று, ஒரு முக்கிய விமானத் தளத்தில் பயிற்சியை முடித்து தரையிறங்கும்போது பிரேக் செயலிழந்து தேஜஸ் விமானம் விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.
விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பியதாகவும், விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது தவறான தகவல் என தேஜஸ் விமான தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (HAL) அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்றும், அது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமகால போர்விமானங்களில் உலகிலேயே மிகச்சிறந்த பாதுகாப்பு கொண்ட விமானம் தேஜஸ் என்றும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய விமானப்படையிடம் உள்ள சுமார் 30-35 தேஜஸ் விமானங்கள் அனைத்தும் பரிசோதனைக்க்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமானப்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
- சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்.
- விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுத் தயாரிப்பு போர்விமானமான 'தேஜஸ்' மீண்டும் விபத்தில் சிக்கி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த விபத்தின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
வழக்கமான பயிற்சியை முடித்துவிட்டு விமான தளத்தில் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் குதித்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
விமானத்தின் Airframe கட்டமைப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தை இனி பயன்படுத்த முடியாத அளவிற்கு அது சிதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்
2024 மார்ச் மாதம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே முதல் விபத்து நிகழ்ந்தது. இதில் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம், துபாய் விமானக் கண்காட்சியின் போது நிகழ்ந்த தேஜஸ் விமான விபத்தில் விங் கமாண்டர் நமான்ஷ் சியால் உயிரிழந்தார்.
தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேஜஸ் விமானங்களையும் விரிவான தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
- வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு அமைந்தது
- வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தையை வங்கதேசம் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், வங்கதேச விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை வருகிற 29-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை
- நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.
துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது ஒரு அரிய சம்பவம் என்று போர் விமான உற்பத்தியாளரான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது, இந்திய தேஜாஸ் போர் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சாயல் இந்த விபத்தில் இறந்தார்.
எதிர்பாராத சூழ்நிலைகளால் விமானம் விபத்துக்குள்ளானதாக நிலையில் இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று HAL தெரிவித்துள்ளது. மேலும் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.
HAL தயாரித்த தேஜஸ் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து திங்களன்று நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.
- பாகிஸ்தானுக்கு ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது.
பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இருந்த ரஷ்யா, மத்திய அரசின் வேண்டுகோள்களை புறக்கணித்து, பாகிஸ்தான் நாட்டுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA இயந்திரங்களை வழங்குவதற்கான காரணத்தை மோடி அரசாங்கம் விளக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூரின் போது நமது நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானங்களில் JF-17 கூட இருக்கலாம் என்றும் இந்திய விமானப்படை தலைவர் தலைவர் கூறியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேரடி தலையீடுகள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் முன்னேறி வருகிறது. இந்தியாவின் நீண்டகால மற்றும் நம்பகமான கூட்டாளியான ரஷ்யா இப்போது பாகிஸ்தானுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதற்கான காரணத்தை மத்திய அரசு நாட்டுக்கு விளக்க வேண்டும்.
இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது. பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்த இந்தியாவால் முடியவில்லை. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் அன்புடன் வரவேற்றார். தற்போது ரஷிய அதிபர் புதின் ஆயுதங்களை வழங்குகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
- டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இதே ஜூன் B2 Bomber விமானங்களை வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவாரத்தை நடத்த நேற்று ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் புதின் தரையிறங்கும் போது ஒரு B2 Bomber குண்டுவீச்சு விமானம் அவர் மீது பறந்தது.
அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷியாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இதே ஜூன் B2 Bomber விமானங்களில் பங்கர் பஸ்டர் குண்டுகளை நிரப்பி அதை வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது. B2 Bomber பெரிதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்டவை.
அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருப்பதிலேயே B2B குண்டுவீச்சு விமானங்கள் மிகவும் விலையுயர்ந்த விமானங்கள் ஆகும்.
ஒவ்வொன்றும் 2.1 பில்லியன் டாலர்கள் மதிப்புடையவை. இதில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 6,000 கடல் மைல்கள் வரை பறக்க முடியும். B2 Bomber குண்டுவீச்சு விமானங்கள் 18,144 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டவை. அணு குண்டுகளையும் அவற்றால் சுமந்து செல்ல முடியும்.

B2 Bomber
- பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
- பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
அமெரிக்க நேரப்படி, இன்று காலை சுமார் 6:30 மணியளவில், கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானி பாராசூட்டின் உதவியுடன் வெளியே குதித்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சம்பவ இடத்தில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
- டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே 7 அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியத. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
இந்நிலையில் பாகிஸ்தான் கூறியதை ரஃபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் மறுத்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், இந்தியா ஒரே ஒரு ரஃபேல் விமானத்தை மட்டுமே இழந்தது என்றும், அதுவும் பாகிஸ்தான் தாக்குதலால் அல்ல என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
"ஒரு ரஃபேல் விமானம் அதிக உயரத்தில் பறக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. எங்கள் ஸ்பெக்ட்ரா மின்னணு போர் அமைப்பு தரவு பாகிஸ்தான் நடவடிக்கையால் விபத்து நிகழவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.
- பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது.
- எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக தார் சாலை ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் அதிநவீன F-35B ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக ஹேங்கருக்கு மாற்றப்பட்டது.
ஒரு டோவிங் வாகனத்தில் விமானம் ஹேங்கருக்கு இழுத்துச் செல்லப்பட்டது. சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் திருவனநாதபுர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போதிருந்து, பிரிட்டிஷ் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை சரிசெய்ய முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் மற்றொரு பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது. விமானத்தை இங்கு பழுதுபார்ப்பது சாத்தியமா அல்லது அதை பிரித்து C-17 குளோப்மாஸ்டர் ராணுவ போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்த்து எடுத்துச் செல்ல வேண்டுமா என்பதை குழு முடிவு செய்யும்.
110 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஜெட் விமானம், எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கசிந்தால், இராணுவ ரகசியங்கள் அம்பலமாகும் என்றும் ஆபத்து ஏற்படும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
- 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
- அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.
ரஃபேல் போர் விமானம் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
"ரஃபேல் இஸ் காலிங்" என்று அதன் படத்துடன் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் "நமது ஐரோப்பாவைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.
இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மேக்ரான் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மோதலின்போது இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான் என்றும் அது கூறியது.
- F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான ஆர்டரை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான ஆர்டரை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, திங்களன்று மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான் என்றும் அது கூறியது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது.
F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாகக் கூறப்படுகின்றன.
டிரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலோன் மஸ்க் உட்பட பலர் விமர்சித்த நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு போர் நிறுத்தம் அல்ல, நீடித்த தீர்வைக் காண்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
- நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததா என்றும், 3 ரஃபேல் உட்பட ஆறு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறித்தும் அவரிடம் செய்தித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசுகையில், மே 7 ஆரம்ப கட்ட தாக்குதல்களில் அவற்றை இழந்தோம், ஆனால் எத்தனை போர் விமானங்கள் இழந்தோம் என்பது முக்கியமல்ல, அவற்றை ஏன் இழந்தோம் என்பதுதான் முக்கியம்.
அவை ஏன் சரிந்தன, என்ன தவறுகள் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம். நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் சரிசெய்தோம், இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்கள் அனைத்து விமானங்களும் மீண்டும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கின" என்று அனில் சவுகான் கூறினார்.
இருப்பினும் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் மறுத்தார்.
மே 7 அன்று பாகிஸ்தானுடனான மோதல்களில் இந்திய போர் விமானங்களின் நிலை குறித்து இந்திய அரசாங்கமோ அல்லது இராணுவ அதிகாரியோ வெளிப்படையாக பேசியது இதுவே முதல் முறை.






