என் மலர்
இந்தியா

துபாய் கண்காட்சி விபத்து ஒரு அரிய சம்பவம் - தேஜஸ் போர் விமான தயாரிப்பு நிறுவனம் அறிக்கை
- இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை
- நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.
துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது ஒரு அரிய சம்பவம் என்று போர் விமான உற்பத்தியாளரான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது, இந்திய தேஜாஸ் போர் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சாயல் இந்த விபத்தில் இறந்தார்.
எதிர்பாராத சூழ்நிலைகளால் விமானம் விபத்துக்குள்ளானதாக நிலையில் இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று HAL தெரிவித்துள்ளது. மேலும் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.
HAL தயாரித்த தேஜஸ் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து திங்களன்று நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.






