என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஸ்"

    • விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
    • விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்திய விமானப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் பயனப்டுத்தப்பட்டு வருகின்றன. 

    கடந்த பிப்ரவரி 7 அன்று, ஒரு முக்கிய விமானத் தளத்தில் பயிற்சியை முடித்து தரையிறங்கும்போது பிரேக் செயலிழந்து தேஜஸ் விமானம் விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.

    விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பியதாகவும், விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் இது தவறான தகவல் என தேஜஸ் விமான தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (HAL) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்றும், அது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமகால போர்விமானங்களில் உலகிலேயே மிகச்சிறந்த பாதுகாப்பு கொண்ட விமானம் தேஜஸ் என்றும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய விமானப்படையிடம் உள்ள சுமார் 30-35 தேஜஸ் விமானங்கள் அனைத்தும் பரிசோதனைக்க்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமானப்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  

    • சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்.
    • விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுத் தயாரிப்பு போர்விமானமான 'தேஜஸ்' மீண்டும் விபத்தில் சிக்கி உள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த விபத்தின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    வழக்கமான பயிற்சியை முடித்துவிட்டு விமான தளத்தில் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்தின் போது விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் குதித்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.

    விமானத்தின் Airframe கட்டமைப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தை இனி பயன்படுத்த முடியாத அளவிற்கு அது சிதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்

    2024 மார்ச் மாதம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே முதல் விபத்து நிகழ்ந்தது. இதில் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.

    கடந்த நவம்பர் மாதம், துபாய் விமானக் கண்காட்சியின் போது நிகழ்ந்த தேஜஸ் விமான விபத்தில் விங் கமாண்டர் நமான்ஷ் சியால் உயிரிழந்தார்.

    தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேஜஸ் விமானங்களையும் விரிவான தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    • இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை
    • நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

    துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது ஒரு அரிய சம்பவம் என்று போர் விமான உற்பத்தியாளரான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தெரிவித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது, இந்திய தேஜாஸ் போர் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சாயல் இந்த விபத்தில் இறந்தார்.

    எதிர்பாராத சூழ்நிலைகளால் விமானம் விபத்துக்குள்ளானதாக நிலையில் இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று HAL தெரிவித்துள்ளது. மேலும் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.

    HAL தயாரித்த தேஜஸ் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து திங்களன்று நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. 

    • மதுரை- சென்னை தேஜஸ் ரெயிலை திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    மதுரை

    மதுரை- விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மதுரையில் இருந்து வருகிற 19, 21, 26, 28-ந் தேதிகளில் புறப்படும் டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12651) மற்றும் பிப்ரவரி 14, 16, 21, 23-ந் தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்படும் மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12652) ஆகியவை விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக அந்த ரெயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மதுரை-சென்னை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×