என் மலர்
நீங்கள் தேடியது "போர்விமான விபத்து"
- விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் பயனப்டுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த பிப்ரவரி 7 அன்று, ஒரு முக்கிய விமானத் தளத்தில் பயிற்சியை முடித்து தரையிறங்கும்போது பிரேக் செயலிழந்து தேஜஸ் விமானம் விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.
விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பியதாகவும், விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது தவறான தகவல் என தேஜஸ் விமான தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (HAL) அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்றும், அது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமகால போர்விமானங்களில் உலகிலேயே மிகச்சிறந்த பாதுகாப்பு கொண்ட விமானம் தேஜஸ் என்றும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய விமானப்படையிடம் உள்ள சுமார் 30-35 தேஜஸ் விமானங்கள் அனைத்தும் பரிசோதனைக்க்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமானப்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
- ரஷியாவில் ராணுவ போர் விமானம் ஒன்று தீப்பிடித்து குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதியது.
- இதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ராணுவ போர் விமானம் தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிஅக்ரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்தது.
- ரஷியாவில் ராணுவ போர் விமானம் ஒன்று தீப்பிடித்து குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதியது.
- இதில் 2 பேர் பலியாகினர் என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. விமானத்தில் இருந்த விமானி குதித்து தப்பிவிட்டார்.
இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டொர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.






