search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tejas"

    • விமானப் படைக்குச் சொந்தமான போர்விமானம் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.
    • விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர்விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    • முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

    போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரை- சென்னை தேஜஸ் ரெயிலை திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    மதுரை

    மதுரை- விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மதுரையில் இருந்து வருகிற 19, 21, 26, 28-ந் தேதிகளில் புறப்படும் டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12651) மற்றும் பிப்ரவரி 14, 16, 21, 23-ந் தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்படும் மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12652) ஆகியவை விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக அந்த ரெயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மதுரை-சென்னை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ் விமானத்துக்கு சுமார் 20 ஆயிரம் அடி உயர்த்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது. #Tejas
    புதுடெல்லி:

    ரஷிய தொழில்நுட்பத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானம் வரும் 2022-ம் ஆண்டில் விமானப்படையில் இணைய உள்ளது. இந்நிலையில், வானில் பறக்கும்போதே தேஜாஸ் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி, இந்திய விமானப்படை சாதனை படைத்துள்ளது. 

    இந்தியப் போர் விமானம் ஒன்றுக்கு வானில் எரிபொருள் நிரப்பப்பட்டது இதுவே முதன்முறை. ரஷ்யத் தயாரிப்பான IL-78 MKI  ரக டேங்கர் விமானத்திலிருந்து, தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. 

    சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு தேஜாஸ் விமானம் ஒன்றைத் தயாரிக்க ரூ.463 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேஜாஸ் ரகத்தை சேர்ந்த 123 விமானங்களை சுமார் 50 ஆயிரம் கோடி செலவில் இந்தியா தயாரித்து வருகிறது. 
    ×