ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது விமானப்படை விமானம்

விமானப் படைக்குச் சொந்தமான போர்விமானம் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது. விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது விமானப்படை விமானம்
Published on

ஜெய்ப்பூர்:

இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர்விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com