என் மலர்
நீங்கள் தேடியது "Indian Air Force"
- வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகள் மேற் கொள்ளப்பட்டன.
- சுகோய் போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம்.
குவான்டன்:
இந்திய விமானப்படையும், மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்ற முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.
உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள், ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானங்கள் பங்கேற்றன.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரு நாட்டு விமானப்படைகளும் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகளை மேற்கொண்டன. பயிற்சியின் நிறைவு விழாவில், சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின.

இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர், ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
- பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகளில் இரு விமானப்படைகளும் பங்கேற்பு.
- இருநாட்டு பாதுகாப்பை ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை.
இந்திய விமானப்படையும்,மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது.
உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப் படையின் ஒருபிரிவு, விமானப்படை விமான தளத்தில் இருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
இந்திய விமானப்படையின் எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள் இந்த வான் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானம் வான் பயிற்சியில் பங்கேற்கிறது.
இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் இடம் பெறுகின்றன.
உதாரா சக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்தததற்காக அபிநத்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படையில் பெண் விமானிகளை சேர்க்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது. அந்த வகையில் போர் விமானங்களை இயக்க பீகாரை சேர்ந்த பாவனா காந்த் உள்ளிட்ட பெண்கள் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு 59 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்கிறது.
உரிய காலத்துக்குள் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும் பணிகளை கண்காணிக்கவும், இந்த போர் விமானங்களை பராமரிப்பது மற்றும் ஓட்டுவதற்காக இந்திய விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் இந்திய விமானப்படை சார்பில் தற்காலிக அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து சில மர்மநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை முயற்சியாக கருதப்படும் இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த கணினி தகவல்கள் உள்ளிட்ட ஏதும் களவாடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சண்டிகர் விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வரவான சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, இந்த ஹெலிகாப்டர்களை முறைப்படி விமானப்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடு பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. எனவே, அனைத்து பகுதிகளுக்கும் அதிக எடையுள்ள தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன்கொண்ட ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே, மேம்படுத்தப்பட்ட சினூக் ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது தேசிய சொத்து” என்றார்.
சினூக் ஹெலிகாப்டர்கள் வரவால் இந்திய விமானப்படையின் திறன் மேலும் அதிகரித்துள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றை, அனைத்து நிலப்பரப்புகளுக்கும் எடுத்துச் செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும். #ChinookHelicopter #IAF
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம் என்றும் மிரட்டியது. அதன் பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவிய 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இவ்வாறு விமானப்படை தாக்குதல் தொடங்கி உள்ளதால் இரு நாடுகளில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய விமானப்படை தளபதி தனோவா, கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எல்லையில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், பின்லேடனை பிடிப்பதற்காக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததைப்போன்று நுழைய தயார் என்றும் ஜெட்லி கூறினார். #IndiaPakistanWar #PakistanArmy #IndianAirForce
