என் மலர்
நீங்கள் தேடியது "அசோக் சக்ரா விருது"
- ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
- அண்மையில் 'உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்திய விண்வெளி வீரரான, இஸ்ரோவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவிற்கு இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2025 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு இவர் இரண்டாவது வீரர் ஆவார். அண்மையில் உத்தரப் பிரதேச அரசால் 'உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. லக்னோவைச் சேர்ந்த ஷம்பு தயாள் மற்றும் ஆஷா தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையாக ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா.
முன்னதாக ஒரு பேட்டியில், விண்வெளி வீரராக வேண்டும் என்பது உங்களது சிறுவயது கனவா என்று கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா,
"இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 1984-இல் விண்வெளிக்குப் பயணம் செய்தார்; நான் 1985-இல் பிறந்தேன். அவர் விண்வெளிக்குச் சென்றபோது நான் பிறக்கவில்லை, ஆனால் அவருடைய கதைகளைக் கேட்டும், அவருடைய படங்களைப் பார்த்தும், விண்வெளியில் இருந்து அவர் அனுப்பிய செய்திகளைப் பாடப்புத்தகங்களில் படித்தும் நாங்கள் வளர்ந்தோம். அவருடைய பயணத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அப்போது தோன்றவில்லை, ஏனெனில் அப்போது நம் நாட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் இல்லை." என்று தெரிவித்திருந்தார்.
ராணுவத்தில் வீரதீர செயல் மற்றும் தன்னலமற்ற உயிர் தியாகத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மிக உயரிய அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் பெற்றிருக்கும் நிலையில், முதல் முறையாக காஷ்மீரை சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த நசிர் அகமது வானி (வயது 38) என்ற அந்த வீரர், கடந்த நவம்பர் 25-ந் தேதி சோபியானில் 6 பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையில் பங்கேற்றார். இதில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகள் தனது உடலை துளைத்த போதும் அசராத நசிர் அகமது வானி 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதுடன், மற்றொருவர் காயமடையவும் காரணமானார்.
இந்த சண்டையில் தலையில் குண்டு பாய்ந்ததால் நசிர் அகமது வானி வீரமரணம் அடைந்தார். ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர் முதலில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்தார். பின்னர் மனம் மாறி 2004-ல் தனது இளம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார்.
நசிர் அகமது வானியின் இந்த தீரமிக்க செயலாற்றல் மற்றும் விலைமதிப்பற்ற உயர்தியாகத்தை பாராட்டி அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவரது மனைவி மகஜாபீனிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்குகிறார். #AshokChakraAward #KashmirSoldier #NazirAhmadWani






