என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shubhanshu Shukla"

    • சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி இருந்தார்.
    • சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். அங்கு சுமார் 18 நாட்கள் தங்கி பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.

    இதன்மூலம் 41 ஆண்டுகளில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

    இதற்கிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து கடந்த 17-ம் தேதி இந்தியா வந்தார். அவர் கடந்த 18-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்தார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது, சுபான்ஷு சுக்லா விண்வெளியில் தனது அனுபவங்களை ஜனாதிபதியிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது ககன்யான் திட்டம் வெற்றி பெற சுபான்ஷு சுக்லாவை ஜனாதிபதி முர்மு வாழ்த்தினார்.

    • சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
    • சர்வதேச விண்வெளி மையம், இந்தியப் பெருங்கடலில் இருந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா.

    இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 3 பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடந்த ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த ஜூலை 15-ல் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இந்தப் பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. இவர் இந்த வார தொடக்கத்தில் இந்தியா வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்தார்.

    இந்நிலையில் விண்வெளியில் சவர்தேச விண்வெளி மையத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட இந்தியாவின் Time lapse வீடியோவை சுபான்ஷு சுக்லா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தனது பதிவில், புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்தபோது, இந்தப் பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள படங்களையும் வீடியோக்களையும் எடுத்தேன்.

    இது விண்வெளியில் இருந்து பாரதத்தின் டைம்லேப்ஸ் வீடியோ. சர்வதேச விண்வெளி மையம், இந்தியப் பெருங்கடலில் இருந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

    • விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பினார் சுபான்ஷு சுக்லா.
    • பயணத்தின்போது 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பிளோரிடாவில் இருந்து புறப்பட்டார். அவர் சென்ற விண்கலம் ஜூன் 25ஆம் தேதி விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. ஜூலை 15ஆம் தேதி பூமிக்கு திரும்பினார்.

    இதன்மூலம் விண்வெளிக்கு சென்ற 2ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போதைய இந்த விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைப் படைத்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, சுபான்ஷு சுக்லாவை தன்னுடைய பிரதம மந்திரி இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

    விண்வெளி ஆய்வு மையத்தில் 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    • ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து விவாதம் நடைபெற்றது.
    • எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்றத்தில் விண்வெளி வீரர் ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி பீகார் மாநில SIR விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலையில், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாட்டின் பெருமைய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி, அவை நடைபெறாமல் தடுங்கல் ஏற்படுத்தியது மிகவும் துரதிருஷ்டவசமானது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விக்ஷித் பாரத் விண்வெளி திட்டத்திற்கு முக்கியமான, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது தொடர்பாக விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • சர்வதேச விண்வெளி மையம் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது.
    • சுபான்ஷு சுக்லா தனது குடும்பத்தினருடன் நேற்று காலை இந்தியா வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 3 பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடந்த ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த ஜூலை 15-ல் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இந்தப் பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. நேற்று காலை இந்தியா வந்தடைந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்

    இந்நிலையில், வளர்ச்சியடைந்த இந்தியாவில் விண்வெளி திட்டங்களில் முக்கியமான ஒன்றான சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் முறையாக இந்தியர் சென்றது தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

    • சுபான்ஷு சுக்லா ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார்.
    • இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்த அவர் கடந்த, மாதம் 15-ம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

    இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    இந்நிலையில், சுபான்ஷு சுக்லா தனது மனைவி, மகனுடன் இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் உள்பட பலர் உற்சாகமாக வரவேற்றனர்.

    சுபான்ஷு சுக்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

    வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்துகொள்கிறார். அவர் தனது சொந்த ஊரான லக்னோ சென்று சில தினங்கள் தஙகியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுபான்ஷு சுக்லா ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார்.
    • இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்த அவர் கடந்த, மாதம் 15-ம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

    இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, விரைவில் இந்தியா வருகிறார் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

    வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்துகொள்கிறார். அவர் தனது சொந்த ஊரான லக்னோ செல்லும் முன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுபான்ஷு சுக்லா பூமி திரும்பியபோது பெற்றோர் அவரை ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.
    • சுபான்ஷு சுக்லா தரையிறங்கியதை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

    வாஷிங்டன்:

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

    இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்தார்.

    தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

    இதையடுத்து டிராகன் விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரப்பட்டனர். முதல் வீரராக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். 2-வது வீரராக இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் புன்னகைத்தவாறே, கைகளை அசைத்த படி சுபான்ஷு தரையில் கால்பதித்தார். 3-வது வீரராக ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, 4-வது வீரராக போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி அழைத்து வரப்பட்டனர்.

    சிறிய படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்படும் அவர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடக்க உள்ளன. சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று பத்திரமாக திரும்பிய முதல் இந்தியராக சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளார். சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர். டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை அவரது பெற்றோர் பகிர்ந்து கொண்டனர்.


    • விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.
    • சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    புதுடெல்லி:

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

    அதன்பின், ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். அனைவரும் நலமாக உள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது.

    விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இஸ்ரோவை சேர்ந்தவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில், சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் ஒரு பில்லியன் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி விமானப் பயணமான ககன்யான் நோக்கிய மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.
    • விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

    புதுடெல்லி:

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

    இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

    அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். அனைவரும் நலமாக உள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இஸ்ரோவை சேர்ந்தவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டனர்.
    • 28 மணி நேரம் பயணித்து 26-ம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

    புதுடெல்லி:

    ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

    அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டனர்.

    விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன்பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.

    அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும்.

    இதற்கிடையே, சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

    இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

    அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் 4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் மறுவாழ்வைத் தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு சுபான்ஷு சுக்லாவின் இந்த வெற்றிகரமாக திரும்புதல் ஒரு பெருமையான தருணமாகும். சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • பூமிக்கு திரும்புவதற்காக சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் டிராகன் விண்களத்திற்குள் சென்றனர்.
    • சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு நாளை திரும்புகிறது.

    நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. பின்னர், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

    அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    அவர்களின் 18 நாட்கள் ஆய்வு முடிவடைந்த நிலையில், 4 பேரும் இன்று பூமிக்கு புறப்பட்டுள்ளனர்.

    ஆக்சியம் 4 திட்டத்தில், ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுபான்ஷூ சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழு புறப்பட்டது.

    குழு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 18 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமி திரும்புகிறது.

    ஆக்சியம் 4 திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையம் சென்ற சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு நாளை திரும்புகிறது.

    டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லா குழுவினர் நாளை கலிபோர்னியா கடற்கரையில் வந்து இறங்குவார்கள் என கூறப்பட்டது.

    அதன்பவர், இக்குழு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைய 22.5 மணி நேரம் ஆகும்.

    சர்வதேச ஆய்வு மையத்தில் 7 முக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துவிட்டு குழு திரும்புகிறது.

    அறிவியல் உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி மாதிரிகள் உள்ளிட்ட 580 பவுன்ட் எடைக்கு மேல் பொருட்களை குழு எடுத்து வருகிறது.

    நாளை பூமி திரும்பிய உடன் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் செல்லும் குழுவினர் அங்கு மருத்துவ மேற்பார்வையில் இருப்பர்.

    உடல் நிலை சீராக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர்.

    ×